Posts

Showing posts from 2024

சபிக்கப்பட்ட மரகதம்.

Image
  சபிக்கப்பட்ட மரகதம். பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்ற இடத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லே சபிக்கப்பட்ட மரகதம் என்று அழைக்கப்படுகிறது. இக் கல் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பிரேசில் நாட்டி சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட அந்த கல் ஜெனரல் என்ற பட்டப்பெயர் கொண்ட ஒருவர் அதை பெற்றுக்கொண்டார். அவர் அதை 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்தார். இம் மரகதக்கல் இருந்த இடங்களில் எல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் ஏற்படுத்தியதால் இம் மரகத கல் சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகிறது. பின்னர் அமெரிக்காவை அடைந்த அந்த மரகதக்கல்லை Ferrara என்பவரும் Kit Morrison என்பவரும் New Orleans என்னுமிடத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர். அங்கும் அக்கல்லின் சாபம் பலித்தது. கத்ரினா புயல் அந்த இடத்தை துவம்சம் செய்ததுடன் மரகதமும் மாயமாய் போனது.பின் கலிபோர்னியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கல் இறுதியில் லொஸ் ஏஞ்சலில் உள்ள ஷெரீஃப் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச் சபிக்கப்பட்ட மரகதத்திற்காக அமெரிக்கா மற்றும் பிரேசில் மேதிக்கொண்டாலும் பிரேசில் அம் மரகதத்தை தனது தேசி...

இந்திய பிரிட்டிஷ் கிரீடம்.

Image
Imperial crown of india. இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி நிலவிய போது பிரித்தானி மன்னர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அந் நேரங்களில் இந்திய சமஷ்தான மன்னர்களால் தர்பார் உருவாக்கப்பட்டு  பிரித்தானிய மன்னருக்கான மரியாதையும் வழங்கப்பட்டது.  1911இல் பிரித்தானிய மன்னராக பதவியேற்ற 5ம் ஜோர்ஜ் மன்னர் மற்றும் குயின் மேரி ஆகியோர் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற அரசபேரவையில் கலந்து கொண்டனர். இதன் போது  மன்னருக்காக இவ் Imperial crown of India என்ற கிரீடம் தயாரிக்கப்பட்டது. டெல்லி தர்பாரில் 5ம் ஜோர்ஜ் மன்னன் தனக்குத் தானே இக் கிரீடத்தை சூடிக்கொண்டார். இக் கிரீடம் லண்டனின் பிரபல நகை நிறுவனமான  Garrard & Co நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அன்றைய காலத்தில் இக் கிரீடத்தின் பெறுமதி 60000பவுன்ஸ் ஆகும். சுமார் 1.06kg எடை கொண்டதாகும். 31.5m உயரம் உடையது. இக் கிரீடத்தில் 6170 வைரங்கள், 9 மரகதங்கள் மற்றும் 4 ரூபிகற்களைக் கொண்டதுடன் பிரசித்தி பெற்ற கோஹிநூர் வைரம் கிரீடத்தின் முன்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களால் ஆனது. 5ம் ஜோர்ஜ் மன்னன் இக் கிரீடத்...

உலகத் தகவல்.

Image
உலகில் உள்ள கடல்கள் பற்றிய விபரம். கோளவடிவில் அமையப் பெற்றுள்ள இந்த உலகம் 80% நீர் பரப்பால் ஆனதாகும். நிலப்பரப்பில் காணப்படும் அதிசயங்களை விட கடலில் உள்ள நீருக்கு அடியில் காணப்படும்பல அதிசயங்களில் இன்று வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவில் உள்ளது. உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை 1,450,00,00,00,00000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும். உலகில் காணப்படும் கடல்களின் விபரம் கீழே உள்ளன. 01.இந்துப்பெருங்கடல் 02.பசுபிக் பெருங்கடல் 03.மத்தியதரைகடல் 04.கருங்கடல் 05.ஆர்டிக் பெருங்கடல் 06.அந்தாட்டிக் பெருங்கடல் 07.அந்தமான்கடல் 08.ஜாவாகடல் 09.புளோறஸ்கடல் 10.பண்டாகடல் 11.செலபீஸ்கடல் 12.சாலுகடல் 13.தென்சீனக்கடல் 14.கிழக்குசீனக்கடல் 15.மஞ்சள்கடல் 16.ஐப்பானியக்கடல் 17.ஒகோட்ஸ்கடல் 18.பிரிங்கடல்/பேரிங்கடல் 19.லப்டெவ்கடல் 20.காரைக்கடல் 21.பரன்ஸ்கடல் 22.ஆட்டிக்கடல் 23.நோர்வீஜியன்கடல் 24.வெண்கடல் 25.போல்டிக்கடல் 26.வடகடல் 27.ஐரிஸ்கடல் 28.லிகூறியன்கடல் 29.ரிறேனிய...

பொதுஅறிவு.

பொது அறிவு வினாக்களும் விடைகளும். 01.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு ? *லிட்டில் பாய் 02.உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? *நேச்சர் 03.நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது? * கல்லீரல் 04.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? *சீனா 05.தகவல் தொழிநுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவின் நகரம் என்ன? *பெங்களூர் 06.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? *ஒக்டோபர்-17 07.சீனாவின் தலைநகரம் எது? *பீஜிங் 08.இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி? *பிரம்மபுத்ரா 09.பாரதியார் பிறந்த ஊர் எது? *எட்டயபுரம் 10.உலகில் மிகப்பெரிய நாடு எது? *ரஷ்யா

பொது அறிவு.

பொது அறிவு வினாக்களும் விடைகளும். 01.உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? *தொலமி 02.காந்தத் தன்மையற்ற பொருள் எது?     *கண்ணாடி 03.அதிக வேகமாக ஓடக்கூடிய பறவை     எது ? * தீக்கோழி 04.நீரில் கரையாத வாயு எது ?  *நைட்ரஜன் 05.தண்டி யாத்திரை எதற்கு நடத்தபட்டது ? * உப்பு வரியை எதிர்த்து 06.பாம்புகளே இல்லாத கடல் ? *அட்லாண்டிக் கடல் 07.கடல்களின் எஜமானி   என  அழைக்கப்படும் நாடு எது?           *இங்கிலாந்து 08.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது ? *55 மொழிகள் 09.உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? * சவுதி அரேபியா 10.உலகின் மிகப் பெரிய மியுசியம் எங்கு உள்ளது? *ஆஸ்மோலியன்

உயிரினத் தகவல் - 10.

Image
கங்காரு(Kangaroo). பார்ப்பதற்கு மானின் முகமும் குரங்கின் உடலமைப்பேடு வயிற்றுப் பகுதியில் பையுடனும் காணப்படும் ஒரு விசித்திர உயிரினமே கங்காருவாகும். கங்காரு அவுஸ்ரேலியா கண்டத்திற்கு சொந்தமான உயிரினமாகும். இதற்கு காரணம் அவுஸ்ரேலியாவில் கங்காரு அதிகமாக காணப்படுகிறமையாகும். சுமார் அவுஸ்ரேலியாவில் இருக்கும் மக்கள் தொகையைவிட இரு மடங்கு அதிகமாக கங்காருகள் அங்கு வாழ்கின்றன. இதனாலே கங்காருவை தேசிய விலங்காக பிரகடனம் செய்துள்ளது அவுஸ்ரேலியா.  இவ்விலங்கிற்கு கங்காருஎனப் பெயர் வரக்காரணம் அவுஸ்ரேலியாவின் பூர்வக் குடிகள் இவ் விலங்கை கங்குரு(Gangurru) என்று அழைத்தது ஆங்கிலேயர் காலத்தில் கங்காரு என மாறி தற்காலத்திலும் கங்காரு என அழைக்கப்பட்டு வருகிறது. கங்காருவில் நான்கு வகைகள் உள்ளன. கங்காருகள் மணிக்கு 21Km வேகத்தில் செல்லக் கூடியவையாகும். ஆபத்து வேலைகளில் மணிக்கு சுமார் 72km வேகத்தில் செல்லக் கூடியன.  கங்காருக்கள் 6 - 7 அடி வரை வளரக் கூடியவையாகும். கங்காருவின் குட்டி மிக மிக சிறியதாகவே இருக்கும். சிறிய திராட்சை பழம் அளவில் தான் இருக்கும். இக் குட்டிகள் தமது முயற்சியால் கங்காருவின் வயிற்றுபைக...

உயிரினத் தகவல் - 09.

Image
அணில்(Squirrels) . உலகிலே மிகச் சிறந்த திருடன் அணில்களாகும். சுமார் 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய ஒரு உயிரினமாக அணி உள்ளது. மரத்திலே மிக வேகமாக ஏறக்கூடிய ஒரு உயிரினங்கள் அணிலும் ஒன்றாகும். அணில்கள் ஆங்கிலத்தில் Squirrel என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல்லாகும். தமிழில் அணில் உறுத்தை, வெளில், வரிபுறம் என அழைப்பதுண்டு.  அணிகள் மொத்தமாக 287 வகையான அணில்கள் இன்று வரை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வளவு வகைகள் இருந்தாலும் நமது சூழலில் அடிக்கடி நம்மால் பார்க்கக்கூடிய அணில் வகைகள் வரி அணில்களாகும். இதை மூன்று அல்லது ஐந்து கோடுகளை முதுகில் கொண்டதாக காணப்படும். அணில் பழங்கள், நிலக்கடலைகள், பூச்சிவகைகள், இலைகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.  அணில்கள் மொத்தமாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நிலத்தில் வாழும் அணில்கள் பறக்கும் அணில்கள் மரத்தில் வாழும் அணிகள் என்பனவாகும். பறக்கும் அணில்கள் சுமார் 300 அடி உயரம் உள்ள மரத்திலிருந்து கூட மட்டும் ஒரு மரத்திற்கு தாவக்கூடிய இயல்பு கொண்டவை ஆகும். அணிகளால் சுமார் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு கூட பாய முடியும். அணி...

உயிரினத் தகவல் - 08.

Image
கரப்பான் பூச்சி(Cockraoches). பூச்சிகள் என்றாலே மனிதன் பயப்படுகின்ற ஒரு உயிரினம் தான். இதில் கர்ப்பம் பூச்சியை மிக மிகப் பயங்கரமானதாக உள்ளது. இதற்குக் காரணம் கரப்பான் பூச்சியினால் மனிதனுக்கு ஏற்படுகின்ற அழர்ச்சி மற்றும் பல்வேறுபட்ட நோய்களே ஆகும். கரப்பான் பூச்சி சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே இந்த உலகில் தோன்றிய ஒரு அதிசய உயிரினமாகவே உள்ளது. கரப்பான் பூச்சிகளால் மிகப்பெரிய அதாவது அணுகுண்டு அறிவைக் கூட தாங்கக் கூடிய ஒரு சக்தி உள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக நாலாயிரத்திற்கும் அதிகமான கரப்பான் பூச்சி வகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகக் குறைந்த அளவான வகையை மனிதர்களோடு புலங்கக் கூடிய கரப்பான் பூச்சிகளாக காணப்படுகின்றன. கரப்பான் பூச்சிகளால் நீருக்குள் மூச்சு விடாமல் மூழ்கி இருக்க முடியும். சுமார் 40 நிமிடங்கள் நீருக்குள் மூழ்கி இருக்கக் கூடியவை இந்த கரப்பான் பூச்சிகள். வெப்பமான காலநிலையில் கரப்பான் பூச்சிகள் எளிதாக இனப்பெருக்கம் செய்கின்றன. கரப்பான் பூச்சிகள் இரண்டு நீண்ட கொம்புகளையும் பறக்க உதவும் இரண்டு சிறிய இறக்கைகளையும் கொண்டுள்ளன. இவற்றோடு உடலில் காணப்படும் துவாரங்கள...

உயிரினத் தகவல் - 07.

Image
எலிகள்(Rats).🐁🐁🐭 எலி என்றாலே மனிதனை அலறவிடுகின்ற ஓர் சிறு வகை உயிரினமாகும். மனிதனால் எதிரியாக பார்க்கப்படும் உயிராகவும் உள்ளது. இதற்கு காரணம் மனிதனைப் போலவே எலிகளும் சிந்திக்க கூடிய திறமை கொண்டவை. உலகிலே மொத்தமாக 2 பில்லியன் கணக்கான எலிகள் வாழுகின்றன.  எலிகள் முதல் முதலில் இருந்தது ஆசிய கண்டத்தில் ஆகும். இவை வணிகத்திற்காக சென்ற கப்பல்களின் மூலமாகவே மற்றைய நாடுகளை சென்றடைந்தன. சங்க கால இலக்கியங்களான சீவக சிந்தாமணி, நற்றினை ஆகிய நூல்களில் எலி பற்றிய கருத்துக்கள் உள்ளன.  எலிகளில் சுமார் 60வகையான எலி இனங்கள் காணப்படுகின்றன. மூஞ்சூரு, வெள்ளை எலி, கள்ள எலி, சுண்டெலி, பெருச்சாளி, வயல் எலி ஆகியவையும் இவற்றுள் அடங்கும். உலகிலே மிகப் பெரிய எலியாக இருப்பது பப்பூவா நியூக்கினி இல் கண்டு பிடிக்கப்பட்ட பொசாவி வுல்லி(Bosavi woolly) எலியாகும். இது சுமார் 1.5kg எடையுடையதாகும்.   எலிகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை 8 - 12குட்டிகளை ஈனக்கூடியன. இக்குட்டிகள் சரியாக மூன்று மாதங்களில் குட்டி ஈனும். எலிகள் பொந்துகளில் வாழக் கூடியவையாகும். தனது பொந்தில் பஞ்சு போல அமைத்து சொகுசாக வாழும். எல...

சர்வாதிகாரி - 01.

Image
இடி அமீன்(Idi Amin). உலகிலே மிக மிக கொடுரமான சர்வாதிகாரி இடி அமீன் என்பவரேயாவர். இருப்பினும் அவரை மிகக் குறைவானவர்களே அறிந்துள்ளனர். இடி அமீன் என்பவர் ஒரு சர்வாதிகாரி என்று மட்டுமே அறிந்துள்ளனர். அவரின் கொடுர ஆட்சி பற்றி பார்ப்போம். இடி அமீனை ஒரு கொடுர கொலைகாரனாக எண்ணக் காரணம் எவ்விதக் கொள்கையும் இன்றி பதவி வெறிக்காக லட்சம் கணக்கிலான மக்களை கொன்று குவித்த மனித மிருகமாகும். ஆபிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்ட என்ற நாட்டின் வட பகுதியில் பிறந்தவர் இடி அமீன். பிரித்தானியரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த உகாண்டாவில் அக்காலத்தில் பிறப்பு பதிவுகள் முறையாக இல்லாத காரணத்தால் இடி அமீன் பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை. இவ்வாறு  இருப்பினும் 1920 - 1930 ஆண்டு காலப்பகுதியில் இடி கூறப்படுகிறது. இடி அமீன்னின் தந்தை அமீன் தாதா. இவர் பிறப்பிலேயே கிறிஸ்துவராக இருந்தவர். இடி அமீன்னின் தாய் அஸ்சா ஆட்டே. இவர் ஒரு இஸ்லாமிய பெண் ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே இடி அமீன். இவரது குடும்பத்தில் மூத்த புதல்வர் ஆவர். இவரது சிறு வயதில் இவரது தந்தை இவரையும் இவரது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதனால் ஏழ்மை ச...

சுவையூட்டி - 02.

Image
பூண்டு/ வெள்ளைப்பூடு(Garlic). இன்றைய காலகட்டத்தில் பூண்டானது மருத்துவ பொருளாகவும் உணவாகவும் பயன்படுகிறது. இதேபோல் பண்டைய காலத்திலும் பூண்டினை இவ்வாறு பயன்பாடுத்தியமைக்கான சான்று உள்ளது. கி.மு 2300 ஆண்டு பகுதியில் சுமேதரிய கல்வெட்டுக்கள் பூண்டினை உணவுகளுடன் பயன்படுத்தியமைக்கான சான்று காணப்படுகின்றது. பூண்டின் தாயகம் சரியாக கண்டறியப்பட வில்லை என்றாலும் மத்திய ஆசிய பகுதிகளில் பூண்டு விளந்த தடயம் காணப்படுவதாக 1875 ஆம் ஆண்டு எட்வேர் ரீகல் என்ற ஜேர்மனிய தாவரவியளாலர் கூறியுள்ளார். பூண்டின் தாயகம் தெளிவாக அறியப்படாவிட்டாலும் பூண்டினை பயன்படுத்தியதற்கான ஆதாரம் காணப்படுகின்றது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதன் தமது உணவில் பூண்டை பயன்படுத்தியமைக்கான படிமங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எகிப்தியர்கள் தமது உணவில் பூண்டி பயன்படுத்தியதோடு மருந்தாகவும் பயன்படுத்தினர்கள். அத்தோடு தமது இறைவனுக்கு படைத்தமைக்கான சான்றுகளும் உள்ளன. இதுக்கு சான்றாக கி.மு 2700 காலப்பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் எகிப்திய மக்கள் தம் கடவுளர்க்கு பூண்டு மற்றும் வெங்காயத்தை படைப்பது போல் உள்ளது. அத்த...

உயிரினத் தகவல் - 06.

Image
கறையான்(Termite). இந்த பூமியில் மனிதர்களை விட பல மடங்கு அதிகமாக வாழும் உயிரினமாக இருப்பது கறையான்கள் ஆகும். இவை சுமார் 20கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்வதாக கூறப்படுகிறது. மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களுள் கறையானும் ஒன்று. இவை மனிதனுக்கு மட்டுமின்றி மரத்தாலான அனைத்து பொருட்களுக்கும் தீங்கு செய்யும் உயிரினமாகும். இவ்வாறாக  கறையான்களால் உலகில் சராசரியாக 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இவற்றுள் விவசாய பொருட்களும் உள்ளடங்கும். இதை விட கறையான்கள் தமிழுக்கு ஏற்படுத்திய பாதிப்பே மிக பெரியதாகும் ராஜராஜனால் தேடி சேமித்து வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் பாதி கறையான்களால் அழிக்கப்பட்டதாகும். யுராசிக் காலப்பகுதியில்ஒருவகை கரப்பான் என்ற பூச்சி வகைகளில் கறையான் பூச்சியினம் இருந்து பிரிந்து வந்ததா ஆய்வுகள் கூறுகின்றன. கறையானை தோற்று வித்த கரப்பான் பூச்சிகள் இன்று வரை வாழ்ந்து வருகின்றன. கறையானை ஆங்கிலத்தில் Termite என்று அழைக்கப்படுகின்றது. இதன் வேர் சொல் லத்தீன் மொழியில் இருக்கிறது. அதாவது லத்தீன் மொழியில் வெள்ளை எறும்புகள் என்று அழைக்கப்படுகிறது. கறையான்...

உயிரினத் தகவல் - 05.

Image
டொல்பின்(Dolphin).🐬🐬 மனிதனுக்கு நிகரான அறிவு கொண்ட உயிரினம் டொல்பினாகும். இற்றைக்கு 50மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே டொல்பின்களின் பரிணாமம் ஆரம்பித்துள்ளது. இவை ஆரம்பத்தில் தரையில் வாழ்ந்தன பின்னர் பரிணாமம் பெற்று நீர்ப் பரப்பை அண்டி வாழ்ந்தன. 5மில்லியன் ஆண்டுகளுக்கு முன் முழுமையாக கடல் வாழ் உயிரினமாக மாறியுள்ளது. தற்போது இருக்கும் நீர்யானைகளே டொல்பின் பரிணாமத்தின் நெருங்கிய உறவாகவுள்ளது. டொல்பினை தமிழில் ஓங்கில் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Dolphin என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்கத்தில் இருந்து மருவி வந்த சொல்லாகும். டொல்பின் என்பது ஒரு பாலூட்டியினம் ஆகும். இவை தமது உடலின் மேற்பரப்பில் காணப்படும் துவாரத்தின் மூலமாகவே சுவாசிக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 5 முறை கடலின் மேற்பரப்புக்கு வந்து டொல்பின்கள் மூச்சு விடுகின்றன. இருப்பினும் டொல்பின்களால் 15 நிமிடத்துக்கும் மேல் மூச்சை பிடித்து நீருக்குள் இருக்க முடியும். டொல்பின்கள் கடல் மற்றும் நதிகளில் வாழக் கூடியவையாகும். உலகம் முழுவதும் உள்ள கடல் மற்றும் நதிகளில் 40வகையான டொல்பின் இனங்கள் உள்ளன. இவற்றில் மிகச்சிறிய டொல்பின் Hector...

காய்கறி - 01.

Image
தக்காளி(Tomato). தக்காளியின் தாயகம் தென்னமெரிக்கா ஆகும். குறிப்பாக தென்னமெரிக்காவின் பெரூ, ஆயன்டினா ஆகிய பகுதிகளில் தான் தக்காளி கண்டறியப்பட்டது. கி.மு.500 ற்கு முன்னர் அமெரிக்க மக்கள் தக்காளியை விவசாயப் பயிராக பயிரிட்டிருக்கின்றனர். அதிலும் மாய நாகரிக மக்களே தக்காளியை அக்காலத்தில் சிறப்பாக பயிரிட்டனர். தக்காளிக்கு  மிகப்பெரிய வரலாறு இருந்திருக்கிறது. இவர்கள் தக்காளியை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தியுள்ளனர். தக்காளியை ஆங்கிலத்தில் Tomato என்று அழைக்கப்படுகின்றது. Tomato என்ற சொல்லானது அமெரிக்காவின் பழங்குடியினரான ஆஸ்டிக் மக்களின் மொழியான nahuatl என்ற மொழியில் இருந்து தோன்றியதாகும். அதில் Tomatl என்ற சொல்லே மருவி Tomato என்று ஆகியது. தங்காளியை முதன் முதலில் உலகொங்கும் பரப்பியவர் ஐரோப்பியராவர். 1521 இல் மெக்சிக்கோவில் இருந்து ஐரோப்பாவுக்கு  Hernan cortes என்ற ஸ்பானியரே கொண்டு சென்றார். இத் தக்காளி மஞ்சள் நிறமாக காணப்பட்டதால் இதை ஐரோப்பாவில் தங்க ஆப்பிள் என அழைத்தனர். பின்னர் போர்த்துகீசரால் இந்தியாவுக்கு அறுமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தக்காளியின் தேவை அதிகரிக்க அதிகரிக்க தக...

உயிரினத்தகவல் - 04.

Image
கழுகு(Eagle). பறவையினங்களின் அரசன் என்று அழைக்கப்படும் உயிருனம் கழுகுகளாகும். உலகத்தில் மொத்தமாக 60 - 70 வகையான கழுகினங்கள் உள்ளன. கழுகுகள் அதிகளவில் ஆபிரிக்க பிரதேசங்களில் வாழ்கின்றன. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசியப்பறவையாக கழுகு உள்ளது.  வெண்டலைக் கழுகு, பொன்னங்கழுகு, கடல் கழுகு, பருந்து, வல்லூறு, பிணந்தின்னி கழுகு அல்லது கருங்கழுகு, பாறு, பனவை, எழால், கங்கு, கூளி, பூகம், கங்கம் என பல்வேறுவகையான கழுகுகள் உள்ளன. சுமார் 70ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய உயிரினம் கழுகுகளாகும். கழுகுகள் சாதாரணமாக நிலப்பரப்பில் இருந்து 10,000 அடி உயரம் வரை பறக்கக் கூடுயவை. அவற்றுள் சில கழுகுகள் 15,000அடி வரை கூட பறக்கக் கூடும். சில கழுகுகள் 3அடி உயரமும் 7அடி நீளமும் கொண்ட பெரிய பறவையினமாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு கழுகும் ஒவ்வொரு அளவில் இருக்கும். கழுகள் உண்ணும் உணவை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாம்பு உண்ணும் கழுகு, மீன் உண்ணும் கழுகு. கழுகு தனது இறக்கை, கூரிய நகங்கள் , அலகு மற்றும் கண்களின் துணையுடனே தமது வேட்டை பயணத்தை  தொடங்குகின்றன. கழுகுகளின் கண்கள் மனித கண்களை விட 4 - 8 மடங்...

சுவையூட்டி - 01.

Image
மிளகு(Pepper). மிளகின் பிறப்பிடம் தென்னிந்தியா வாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்து மிளகு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பண்டைய காலங்களில் மிளகு "கரங்கறி" என்று அழைக்கப்பட்டது. முதன் முதலில் தமிழர்களால் மிளகுகண்டுபிடிக்கப்பட்டது. மிளகின் உண்மையான பெயர் பிப்பாலி அதன் மறுவல் தான் கிரேக்கத்தில் பிப்பர் என்றாகி இன்று ஆங்கிலத்தில் பெப்பர் என்று அழைக்கப் பெறுகிறது.  குறிப்பாக கேரளாவில் தான் மிளகு பயிரிடக்கூடிய காலநிலை கானப்படுகிறது. தற்போது மிளகு உற்பத்தியில் வியட்நாம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்து இந்தோனேசியா, இந்தியா, பிறோசில், சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றது. இலங்கையிலும் மிளகு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக சேர, சோழ காலப்பகுதியில் முக்கியத்துவம் பெற்ற வணிகப் பொருட்களுள் மிளகு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சேரகாலப்பகுதியில் சிறப்படைந்த முசிறி துறைமுகம் தான் மிளகின் நுழைவாயிலாகக் காணப்பட்டது. இங்கிருந்தே யவனர்கள் மிளகினை பொன் கைடுத்துப்  பெற்றுச் சென்றுள்ளனர். இதனை எட்டுத்தொகைபாடல் சான்றளிக்கின்றது. "அரிது செய் விழுப் பொருள் எளிதினின் ப...

உயிரினத் தகவல் - 03.

Image
சிங்கம்(Lion). சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்து ஆகும். காட்டுக்கே ராஜா என்ற பெருமையைப் பெற்ற விலங்கு, பெரிய பலசாலி என்றும் பெயரெடுத்த விலங்கு சிங்கம் தான். பூனைக் குடும்பம் என்றழைக்கப்படும் விலங்கின வகையில் சிங்கமும் ஒன்று. உலகத்தில் மிக அதிகமாக வாழும் இந்த வகை விலங்குகளில் சிங்கத்துக்கு இரண்டாம் இடம்.  சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்தஇலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். ஆண் சிங்கம் சுமார் 150kg முதல் 250kg எடை கொண்டதாக இருக்கும். ஆப்பிரிக்க வகை சிங்கங்களின் எடை சுமார் நூற்றுத்தொண்ணூறு கிலோ இருக்கும். உலகத்திலேயே மிக அதிக எடை கொண்ட சிங்கத்தின் எடை 312 கிலோவாக இருந்தது. இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது. பெண் சிங்கங்கள் பொதுவாக உருவத்தில் சிறிதாகவும் எடை குறைந்தவையாகவும் இருக்கும். அவை சுமார் நூற்று பதினேழு முதல் நூற்று அறுபத்து ஏழு கிலோ எடை கொண்டவையாக இருக்கும். பொதுவாக சிங்கங்கள் பத்து முதல் பதினான்கு ஆண்டு வரை உயிர் வாழக் கூடியவை. தகுந்த பாதுகாப்புடன் இருப்பின் இருபது வயது வரைகூட ஆயுட்காலம் நீடிக்கும். கடந்த இரண்டாம் நூற்றாண்டு வரை ...

உயிரினத் தகவல் - 02.

Image
எறும்பு தின்னி(Pangolin). எறும்பு தின்னியின் செதில்கள் கடினமானவை. இதன் ரோமங்கள் இயற்கையாகவே ஒன்றாகி செதில்களாக மாறுகின்றன. நீளவாக்கிலே 11லிருந்து 13 வரைக்கும் வரிவரியாக பெரிய செதில்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த மாதிரி பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் முக்கோணமாக கூர்மையாக இருக்கும். பாரம்பரிய சீன மருத்துவத்தில் எறும்பு தின்னியின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், சீனா, வியட்நாம் போன்ற இடங்களில் எறும்பு தின்னிகளின் இறைச்சி உண்ணப்படுகிறது. ஆசியாவில் நான்கு வகையான எறும்பு தின்னிகள் உள்ளன. அவை இந்திய எறும்பு தின்னி, பிலிப்பைன் எறும்பு தின்னி, சுண்டா எறும்பு தின்னி மற்றும் சீன எறும்பு தின்னி , ஆப்ரிக்க மத்திய ரேகை பகுதியில் உள்ள மழைக்காடுகள் மற்றும் புல்வெளிகளில் காணப்படும் ராட்ச எறும்பு தின்னி  இவை 1.8 மீட்டர் நீளமும் 30 கிலோ எடையும் கொண்டவை.  புலி போன்ற விலங்குகளுக்கு எறும்பு தின்னியை சாப்பிட மிகவும் பிடிக்கும் எதிரிகள் தாக்க வந்தால் மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துக்கொண்டு செதில்களை மேல் நோக்கி செங்குத்தாக வைத்துக் கொண்டு மிகவும் மோசமான வாசணையுடன் இருக்கின்ற மஞ்சள...

சுவை தரும் கனி -08.

Image
முள் சீத்தாப்பழம்(soursop). முள் சீத்தாப்பழத்தின் தாயகம் அமெரிக்காவின் பிரேஸில் நாட்டு பகுதியை சார்ந்த அமேசான் காடுகள் ஆகும். பிலிபைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது. இம் மரங்கள் வெப்ப மண்டலத்தில் வளரக்கூடியனவாகும். வறட்சியை தாங்கக் கூடியனவாகும். சீதளப்பழம் என்பது மருவி சீத்தாப்பழம் என்றாகியது. இயற்கை தரும் ஐஸ்கிரீம் என்று புகழ்கின்றனர்.  முள் சீதாவானது வெப்ப மண்டலத்தைச் சார்ந்த தாவர இனமாகும். இம்மரம் சுமார் 20 அடி உயரம் வரை வளரக்கூடியதாகும். இதன் பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டதாகும். பொதுவாக இம்மரம் மே மாதத்தில் பூத்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பழம் தருவனவாகும். முள் சீத்தாப்பழங்கள் இதய வடிவம், நீள்வட்டம் அல்லது ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படுகிறது. இப்பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவையினைக் கொண்டுள்ளது. இப்பழத்தின் உட்புறச் சதையானது வெள்ளை நிறத்தில் கிரீம் போன்று காணப்படும். இதனுள் அடர் பழுப்புநிறம் அல்லது கறுப்பு நிற விதைகள் காணப்படுகின்றன. முள் சீத்தாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ப...

பிரமிக்க வைக்கும் தகவல் - 01.

Image
சீனப்பெருஞ்சுவர்(Great Wall of China). உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பல சுவாரஸ்யமான தகவல்களையும் செய்திகளையும் கொண்ட நீண்ட தேடலாகவே இருக்கின்றது. சீனப் பெருஞ்சுவர் என்பதற்கு 'நீண்ட நகர் கொண்ட கோட்டை' என்பதே பொருளாகும். மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியாவிலிருந்தும் மஞ்ரியாவில் இருந்தும் வந்த காட்டு மிராண்டிகளின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசை காப்பதற்காக கட்டப்பட்ட அரணாகும். சீனப் பெருஞ் சுவரானது பாலு நதியருகில் அமைந்துள்ள கொரியாவுடனான எல்லையில் இருந்து கோபிபாலைவனம் வரை 6400கிலோ மீற்றர் வரை நீண்டு செல்கின்றது. இச்சுவரின் சராசரி உயரம் 7.88 மீட்டர். ஒரு சில இடங்களில் இச்சுவர் 14 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. இச் சுவர் கட்டுவதற்கான பணிகள் கி.மு 208 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த போரினால் கட்டுமானப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டது. கி.மு 100இல் ஹான் வம்சத்தவரும் கி.பி 1368 இல் மிங் வம்சத்தினரும் கட்டினர்.  மிங் வம்சப் பெருஞ்சுவர் கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹி வாங்கடா வோவில் தொடங்குகிறது. 9 மாகாணங்களையும் 100கவுண்டிகளையும் கடந்து மேற்கு மு...

சுவை தரும் கனி - 07.

Image
வில்வ பழம்(Bael Fruit). வில்வம் இந்து மத்தில் வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும் 'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இது கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன. பண்டைய நாட்களில் பழங்களின் ராஜா எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வம், மஹாவில்வம் என இரண்டு வகை உண்டு. ஒரு மரத்தில் ஆண்டிற்கு 400 பழங்கள் வரை கிடைக்கும். வில்வம்பழம் பறித்துப் பார்த்தால் உருண்டையாகவும், ஓடு கடினமாயுமிருக்கும். பார்ப்பதற்கு மங்களான மஞ்சள் நிறத்துடன் கூடியது. அதிக துவர்ப்பான சுவை கொண்டது. வில்வ மரங்கள் இலையுதிர் வகையை சார்ந்ததாகும். முட்கள் காணப்படும் 15m வரை வளரக்கூடியவை.  வில்வ பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், இரும்பு சத்து, புரதம், கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வில்வ பழம் மட்டுமல்ல வில்வமரத்தின் பூ, காய், வேர், பிசின், பட்டை, ஓடு போன்றவைகள் மருந்தாக பயன்படுகின்றன. வில்வ பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். வில்வ பழம் நாம் உண்...

கலைஞர் - 01.

Image
சார்லி சாப்ளின்(Charlie chaplin). சார்லி சாப்ளின் இவரை திரையில் பார்த்தாலே குழந்தைகள் குதூகலிப்பார்கள். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று எல்லா பரிமாணங்களிலும் வெற்றியடைந்து, வசனம், கதை இன்றி தனது நடிப்பால் சிரிக்கவைத்தவர் இவர். திரையுலகிற்கு நகைச்சுவை பாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது பெற்றோர் "மியூசிக் ஹால்" கலைஞர்களாவர். சார்லி சாப்ளின் இங்கிலாந்து நாட்டின் லண்டன் என்ற நகரத்தில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாக பிறந்தார். பெற்றேர்களின் திருமண வாழ்க்கை முறிந்தது. சார்லி தனது தாயின் கண்காணிப்பில் வளர்ந்தார். அவரது அன்னை நாட்டியத்தில் நடிப்பது வழக்கம். 1896இல் ஹாரியட்டிற்கு(சார்லியின் தாய்) வேலை ஏதும் கிடைக்காத நிலையில் சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அநாதைகளுக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில் சார்லியின் 12ஆவது வயதில் இவரது தந்தை குடிப்பழக்கத்தினால் உடல் நலம் குன்றி மரணமடைந்தார்.  இதனால் இவரது தாயும் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக...

சுவை தரும் கனி - 06.

Image
விளாம்பழம்(Wood apple). தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும். இதன் தாயகம் இந்தியா. பிறகு பாகிஸ்தான், இலங்கை, தாய்வான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்பட்டது. சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. மிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும். அதிலும், சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காயாக இருக்கும்போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும், புளிப்பும் கலந்த புது சுவையாக இருக்கும். யானை மிகவும் விரும்பி சாப்பிடும் பழங்களுள் விளாம்பழமும் ஒன்றாகும். இது கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். விளாம்பழத்தில் இரும்புச்சத்து, விற்றமீன் A, கல்சியம், பொஸ்பரசு, புரதம், நார்ச்சத்து, காபோஹைதரட்டு ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. விளாமரத்தின் வேர், இலை, காய், பிசின், பழம் போன்றவை மருத்துவக் குணங்கள் கொண்ட...