இந்திய பிரிட்டிஷ் கிரீடம்.

Imperial crown of india.

இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி நிலவிய போது பிரித்தானி மன்னர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அந் நேரங்களில் இந்திய சமஷ்தான மன்னர்களால் தர்பார் உருவாக்கப்பட்டு  பிரித்தானிய மன்னருக்கான மரியாதையும் வழங்கப்பட்டது. 

1911இல் பிரித்தானிய மன்னராக பதவியேற்ற 5ம் ஜோர்ஜ் மன்னர் மற்றும் குயின் மேரி ஆகியோர் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற அரசபேரவையில் கலந்து கொண்டனர். இதன் போது  மன்னருக்காக இவ் Imperial crown of India என்ற கிரீடம் தயாரிக்கப்பட்டது. டெல்லி தர்பாரில் 5ம் ஜோர்ஜ் மன்னன் தனக்குத் தானே இக் கிரீடத்தை சூடிக்கொண்டார்.

இக் கிரீடம் லண்டனின் பிரபல நகை நிறுவனமான  Garrard & Co நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அன்றைய காலத்தில் இக் கிரீடத்தின் பெறுமதி 60000பவுன்ஸ் ஆகும். சுமார் 1.06kg எடை கொண்டதாகும். 31.5m உயரம் உடையது. இக் கிரீடத்தில் 6170 வைரங்கள், 9 மரகதங்கள் மற்றும் 4 ரூபிகற்களைக் கொண்டதுடன் பிரசித்தி பெற்ற கோஹிநூர் வைரம் கிரீடத்தின் முன்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களால் ஆனது.

5ம் ஜோர்ஜ் மன்னன் இக் கிரீடத்தை டெல்லி தர்பாரில் 3 1/2 மணித்தியாலம் மட்டும் அணிந்த பின் "இந்த கிரீடத்தின்  எடை அதிகமாக இருப்பதால்  எனது தலை வலித்தது என தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்". மீண்டும் இந்த கிரீடத்தை அணியவில்லை. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இக் கிரீடம் Tower of London இல் உள்ள Jewel house இல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சுய கற்றல்.

ஆரோக்கிய வாழ்க்கை.

ஆரோக்கிய வாழ்க்கை.