கலைஞர் - 01.

சார்லி சாப்ளின்(Charlie chaplin).

சார்லி சாப்ளின் இவரை திரையில் பார்த்தாலே குழந்தைகள் குதூகலிப்பார்கள். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று எல்லா பரிமாணங்களிலும் வெற்றியடைந்து, வசனம், கதை இன்றி தனது நடிப்பால் சிரிக்கவைத்தவர் இவர். திரையுலகிற்கு நகைச்சுவை பாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது பெற்றோர் "மியூசிக் ஹால்" கலைஞர்களாவர்.

சார்லி சாப்ளின் இங்கிலாந்து நாட்டின் லண்டன் என்ற நகரத்தில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாக பிறந்தார். பெற்றேர்களின் திருமண வாழ்க்கை முறிந்தது. சார்லி தனது தாயின் கண்காணிப்பில் வளர்ந்தார். அவரது அன்னை நாட்டியத்தில் நடிப்பது வழக்கம். 1896இல் ஹாரியட்டிற்கு(சார்லியின் தாய்) வேலை ஏதும் கிடைக்காத நிலையில் சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அநாதைகளுக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில் சார்லியின் 12ஆவது வயதில் இவரது தந்தை குடிப்பழக்கத்தினால் உடல் நலம் குன்றி மரணமடைந்தார். 

இதனால் இவரது தாயும் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த "கேன் ஹில் அசைலம்" என்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரும் 1928இல் மரணமடைந்தார். சார்லி சாப்ளின் தனது 5 வயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894 இல் மியூசிக் ஹாலில் அவர் தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சார்லி சிறுவயதில் பல நாட்கள் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த பொழுது இரவு நேரங்களில் அவரது தாய் ஜன்னல் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சார்லி சாப்ளினுக்கு பத்து வயது இருந்த பொழுது சிட்னி லண்டன் ஹிப்போர்ட் ரோமில் 'சின்ட்ரெல்லா' பாண்டோமைமில் ஒரு பூனையாக(நகைச்சுவைக்கதாபாத்திரம்) நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

சார்லி சாப்ளினின் தயாரிப்பாளர் மாக் செனட் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சார்லிக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் விரைவில் தன்னை பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது அசாதாரண வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும் நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புதிய படைப்புகள் படைக்கவும், உரிமை கொடுக்கப்பட்டது. இவரது வளர்ச்சியையும் இவரது நிர்வாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் அவருடைய வளர்ச்சி ஜெட் வேகத்தில் பறந்தது.1914 இல் வாரத்திற்கு 150டொலர் வாங்கிய சார்லி சாப்ளின் 1917 இல் ஒரு மில்லியன் டொலருக்கு பாஸ்ட் நேஷனல் என்ற கம்பனிக்கு ஒப்பந்தம் ஆனார். 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது நிரம்பிய மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார்.

இவர் 1919இல் மேரிபிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ் மற்றும் கிரிபித்துடன் இணைந்து யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டூடியோவை துவங்கினார். இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூயோர்க்" (1957), "தி சாப்ளின் ரெவ்வூ"(1959) மற்றும் சோபியா லாரென். மார்லன் ப்ராண்டோ நடித்த "அகௌண்டஸ் ப்ரம் ஹாங்காங்".

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றவர். தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக சிறப்பு விருதை பெற்றார். அதைத்தவிர, சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளார். 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994 ஆம் ஆண்டு அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

சார்லி சாப்ளின் 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். பின்நாளில் சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்தனர். சொந்த வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் இருந்தாலும் மக்கள் தங்கள் கவலையை மறந்து சிரிக்கச் செய்த சார்லி சாப்ளின் ஒரு சகாப்தம் தான்.

Comments

  1. இது போல எல்லா கலைஞர்கள் பற்றியும் போடவும் 💫

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.