சுவை தரும் கனி - 03.
மாதுளம்பழம்(Pomegranate).
மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக இருக்கிறது. பழங்களிலேயே பழமையானது மாதுளை யாகும்.சிறந்த பழமும் மாதுளம்பழம்தான். மஞ்சள், செம்மஞ்சள், இளச் சிவப்பு, கடும்சிவப்பு ஆகிய வர்ணங்களின் கலவையோடு எண்ணெய் தேய்த்து மினுக்கியது போன்றள பர்ப்பதற்கு அழகாக காணப்படுகிறது மாதுளம்பழம். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன.
மாதுளையின் தாயகம் மத்திய கிழக்கு ஆசியா மற்றும் இமயமலையின் அடிவாரப்பகுதி எனக் கருதப்படுகிறது. இப்பழமானது ஆசியா, காகசஸ், வடஆப்பிரிக்கா, மத்தியதரைக்கடல் பகுதி ஆகிய இடங்களில் பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்பட்டதாக கூறப்படுகின்றது. சீன நாகரிகத்தில் மாதுளை அதிர்ஷ்டப்பழமாகக் கருதப்படுகிறது.
மாதுளையில் விற்றமின் C, புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து, செலினியம்ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுபடகின்றன. மாதுளையின் பூக்கள், பட்டைகள், காய்கள், பழங்கள், வேர்கள் ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டவை. இப்போது மாதுளம் பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்களை பார்ப்போம்.
மாதுளம்பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தும்போது அது இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் தலைமுடியின் வேர்களை உறுதிப்படும், முடிவளர்ச்சித் தூண்டப்படும். தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும், ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். இப்பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தும்போது ஏற்கனவே உள்ள புற்றுச்செல்களும் அழிகின்றன. எனவே இப்பழத்தினை அடிக்கடி உண்டு புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். மாதுளையில் உள்ள Ellagic Acid சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்ஆற்றல்உள்ளது. மாதுளம்பழச்சாறு இரத்த அடர்த்தியை குறைத்து சீரான ஓட்டத்திற்கு பங்களிக்கிறது
மாதுளையில் உள்ள பாக்டீரிய, வைரஸ் எதிர்ப்பு பொருட்கள் பற்களில் பாதிப்பு ஏற்படுவதை தடைசெய்கிறது. மேலும் இப்பழம் வாயில் உண்டாகும் தொற்றுநோய்களையும் தடைசெய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
மாதுளம்பழ ரசத்துக்கு தாதுவை பெருக்கும் ஆற்றல் உண்டு. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறைபாடுகளை நீக்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன.மாதுளை வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சி ஊட்டுவதின் மூலம் எதிர்க்கிறது.
மாதுளைப் பழச்சாறு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி இரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து குணமடையும். மாதுளையில் இருந்து சாலட்டுகள், சூப்புகள், சர்ப்பத்துகள், ஜெல்லிகள், கேக்குகள், இனிப்புகள், குளிர்பானங்கள் தயார் செய்யப்படுகின்றன.
மாதுளம் பழத்தை எமது அன்றாட வாழ்வில் இலகுவாக யூஸ் செய்து உட்கொள்ள முடியும்.எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
மாதுளம் பழத்தின் தோலை உரித்து முத்துக்களை எடுத்துக் கொள்ளவும், மிக்ஸியில் , மாதுளை முத்துக்கள், சீனி மற்றும் நீரை விட்டு கலத்தல், பிறகு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும், பின் நன்கு அரைத்து வடிகட்டவும். இவ்வாறு தினமும் குறிப்பிட்ட அளவில் அருந்துவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.
Comments
Post a Comment