சுவை தரும் கனி - 06.

விளாம்பழம்(Wood apple).

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும். இதன் தாயகம் இந்தியா. பிறகு பாகிஸ்தான், இலங்கை, தாய்வான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்பட்டது. சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. மிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும். அதிலும், சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காயாக இருக்கும்போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும், புளிப்பும் கலந்த புது சுவையாக இருக்கும்.

யானை மிகவும் விரும்பி சாப்பிடும் பழங்களுள் விளாம்பழமும் ஒன்றாகும். இது கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். விளாம்பழத்தில் இரும்புச்சத்து, விற்றமீன் A, கல்சியம், பொஸ்பரசு, புரதம், நார்ச்சத்து, காபோஹைதரட்டு ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

விளாமரத்தின் வேர், இலை, காய், பிசின், பழம் போன்றவை மருத்துவக் குணங்கள் கொண்டவையாகும்.

உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சி ஆகியவற்றுக்கு விளாம்பழம் மிகவும் நல்லது. பலருக்கும் ஏற்படக்கூடிய மூட்டு வலி, உடல் வலியை சரி செய்யக் கூடியவை.வாய்ப்புண், குடல் அல்சர் போன்ற பிரச்சனைகள் சரியாக்ககூடியவை இப் பழங்கள். வறட்டு இருமல், வாய் கசப்பு ஆகியவற்றுக்கு தீர்வு தரும் விளாம்பழங்கள்.

விளாம்பழம் அஜீரணக் கோளாறு பிரச்சனையை நீக்கக் கூடியதாகும். அத்தோடு பற்களுக்கு உறுதியளிக்கிறது. விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு விளாம்பழம் சிறந்ததாகும்.

நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த சிறந்ததாகும். வெல்லத்துடன் விளாம்பழச் சதையைப் பிசறி சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் நிவர்த்தியாகும்.

விளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. இரத்த உற்பத்திக்கு உதவுவதோடு இரத்ததை சுத்திகரிக்கவும் செய்கின்றது இந்த விளாம்பழங்கள். கல்லீரலைப் பலமாக்கும்.கண்பார்வைக்கு ஊட்டமளிக்கும்.

இதயத்திற்கு நல்ல பலத்தை தருவன. நரம்புகளுக்கு வலிமை தரக் கூடியவை இவ் விளாம்பழங்கள். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கக்கூடியவை இப் பழங்கள். குழந்தைகளுக்கு அடிக்கடி விளாம் பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடைவதோடு ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். 

இவ்வாறாக பல நன்மைகளை தரும் விளாம்பழ டீ செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்.

விளாம்பழம் 1 , நாட்டு சர்க்கரை

செய்முறை 

பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளாம்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து  நீர் விட்டு கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி அருந்துவதால் நோய்கள்  குணமாகிறது. தினமும் சிறிதளவு விளாம்பழம் உண்ணுவதால் உடலுக்கு நன்மைகள் பெருகின்றது.

Comments

Popular posts from this blog

சுய கற்றல்.

ஆரோக்கிய வாழ்க்கை.

ஆரோக்கிய வாழ்க்கை.