சுவை தரும் கனி - 07.

வில்வ பழம்(Bael Fruit).


வில்வம் இந்து மத்தில் வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும் 'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.இது கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன. பண்டைய நாட்களில் பழங்களின் ராஜா எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வம், மஹாவில்வம் என இரண்டு வகை உண்டு.

ஒரு மரத்தில் ஆண்டிற்கு 400 பழங்கள் வரை கிடைக்கும். வில்வம்பழம் பறித்துப் பார்த்தால் உருண்டையாகவும், ஓடு கடினமாயுமிருக்கும். பார்ப்பதற்கு மங்களான மஞ்சள் நிறத்துடன் கூடியது. அதிக துவர்ப்பான சுவை கொண்டது. வில்வ மரங்கள் இலையுதிர் வகையை சார்ந்ததாகும். முட்கள் காணப்படும் 15m வரை வளரக்கூடியவை. 

வில்வ பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், இரும்பு சத்து, புரதம், கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வில்வ பழம் மட்டுமல்ல வில்வமரத்தின் பூ, காய், வேர், பிசின், பட்டை, ஓடு போன்றவைகள் மருந்தாக பயன்படுகின்றன. வில்வ பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். வில்வ பழம் நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி செய்து குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. வில்வ பழத்தோடு பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்தி வந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.

வில்வ பழத்தினை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும். வில்வமின் துவர்ப்புத்தன்மையும் மலமிளக்கித்தன்மையும் பசியை உண்டாக்கும். 

இதயத்தை பாதுகாக்கும் உணவுகளில் வில்வப் பழமும் ஒன்று. வில்வ பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக பாது காக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால் நீண்ட நாள்கள் வாழ முடியும். வில்வ பழங்கள் உடல் வலுவை அதிகரிக்கச் செய்யும்.

தலையிலே ஏற்படும் வழுக்கையை அகற்றி, மீண்டும் கூந்தலை வளரச்செய்யும் ஆற்றல் வில்வப் பழத்தின் தோலிற்கு உள்ளது. வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும். குடல்புண் மற்றும் குடல் புழுக்களால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வம் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் சரி செய்ய உகந்தது. 

வில்வம் பழத்தின் உள்ளே இருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வருவதனால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு தோல் பளபளப்பாகவும் காணப்படும்.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.