உயிரினத்தகவல் - 04.

கழுகு(Eagle).

பறவையினங்களின் அரசன் என்று அழைக்கப்படும் உயிருனம் கழுகுகளாகும். உலகத்தில் மொத்தமாக 60 - 70 வகையான கழுகினங்கள் உள்ளன. கழுகுகள் அதிகளவில் ஆபிரிக்க பிரதேசங்களில் வாழ்கின்றன. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசியப்பறவையாக கழுகு உள்ளது. 

வெண்டலைக் கழுகு, பொன்னங்கழுகு, கடல் கழுகு, பருந்து, வல்லூறு, பிணந்தின்னி கழுகு அல்லது கருங்கழுகு, பாறு, பனவை, எழால், கங்கு, கூளி, பூகம், கங்கம் என பல்வேறுவகையான கழுகுகள் உள்ளன.

சுமார் 70ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய உயிரினம் கழுகுகளாகும். கழுகுகள் சாதாரணமாக நிலப்பரப்பில் இருந்து 10,000 அடி உயரம் வரை பறக்கக் கூடுயவை. அவற்றுள் சில கழுகுகள் 15,000அடி வரை கூட பறக்கக் கூடும். சில கழுகுகள் 3அடி உயரமும் 7அடி நீளமும் கொண்ட பெரிய பறவையினமாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு கழுகும் ஒவ்வொரு அளவில் இருக்கும். கழுகள் உண்ணும் உணவை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாம்பு உண்ணும் கழுகு, மீன் உண்ணும் கழுகு.

கழுகு தனது இறக்கை, கூரிய நகங்கள் , அலகு மற்றும் கண்களின் துணையுடனே தமது வேட்டை பயணத்தை  தொடங்குகின்றன. கழுகுகளின் கண்கள் மனித கண்களை விட 4 - 8 மடங்கு துள்ளியமாக பார்க்கக் கூடியவை. அதிலும் பறந்து கொண்டே 3kmக்கு அப்பால் இருக்கும் இரையை கூட துள்ளியமாக பார்த்து வேட்டையாடும். கழுகுகள் தன்னை விட எடை கொண்ட விலங்குகளையே தாக்கி வேட்டையாடி எடுத்துப பறந்து செல்லக் கூடிய ஒரு விசித்திர உயிரினமாகும். குறிப்பாக கழுகுகள் பகலில் மட்டும் தான் வேட்டையாடக் கூடியவையாகும்.

கழுகுகள் தமது இரையை குத்தாக கீழ்நோக்கி விரைந்தே வேட்டையாடும். கழுகுகளால் மணிக்கு 120 - 140KmPH வேகத்தில் குத்தாக சாய்ந்து இரையை பிடிக்க முடியும். இவ்வளவு வேகமாக கீழ்நோக்கி வரும் போது கூட அவற்றால் சீராக சுவாசிக்கக் கூடிய அளவிற்கே அவற்றின் மூக்குத்துவாரங்கள் அமைந்துள்ளன. 

கழுகின் வேட்டைக்கு முக்கியமான பகுதி அதனுடைய அலகு ஆகும். அதன் அலகு நாளுக்கு நாள் வளரக்கூடியவை. மிகக் கூர்மையாக இரையை நன்றாக கிழித்து உண்ணக்கூடிய வகையிலே அவற்றின் அலகு அமைந்துள்ளது. அவற்றின் நகங்களும் மிகக் கூர்மையானவை. இரையை பற்றிப் பிடித்து உயரத்தூக்கிச் செல்லும் அளவிற்கு பலம் கொண்டதாகவே அமைந்துள்ளன.

கழுகின் ஒரு பக்க தானாக இறைகுகள் உதிர்ந்தாலும் அதேபோல கழுகுகள் தாமாகவே மறுபக்க இறைகுகளை பிடுங்கி இரையை விரைந்து தாக்ககூடிய வேகத்தை அடைவதற்காக தம்மை தயார்படுத்தி வைக்கும். கழுகுகள் ஒரே இடத்தில் வட்டமிடக் காரணம் அடிக்கடி சிறகுகளை அடித்து தமது உடலை சோர்வடைய விடாமல் ஒரே சீராக வைத்து வட்டமிடுகின்றன.

கழுகின் இனப்பெருக்க வாழ்கை மற்ற பறவைகளை விட வேறுபட்டதாகவே காணப்படுகிறது. ஒரு கழுகு முதல் முதலில் இணைசேரும் கழுகுடனே தனது வாழ்நாள் முழுவதும் கழிக்கின்றது. குறிப்பாக தமது முதல் துணை இறந்தால் அல்லது நீண்ட காலமாக கூடு திரும்பாவிட்டால் மட்டுமே வேறு துணையை சேரும். ஆண்கழுகுகளின் வேலை உணவு சேகரிப்பது மட்டுமே அதே போல் பெண்கழுகுகள் தமது முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்ததும் அவற்றை உணவூட்டி பாதுகாக்கும் வேலையை செய்கின்றது. பெண்கழுகுகள் முட்டையிட்டு 35 நாட்கள் அடைகாக்கக்கூடியவை. கழுகு 2 முட்டைகள் இடும்.

ஆண்கழுகுகளை விட பெண் கழுகுகளே அளவில் பெரியதாக இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளாகிய டுபாய், சவுதி அரேபியா ஆகியவற்றில் கழுகுகளை பிடித்து வீட்டு பிராணியாக வளர்ப்பதுடன் சில விலங்குகளை வேட்டையாடவும் பயன் படுத்துகின்றனர். அத்தோடு கழுகுகள் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் பழங்குடி மக்களினால் போற்றி மதிக்கப்பட்ட பறவையாகவே உள்ளது. இந்து மதத்திலும் கழுகினை கருடன் என்று வழிபடுகின்றனர்.

இன்றும் கூட கழுகுகளை பல்வேறு நவீன துறைகளில் பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளது. அதிகளவு போர் விமானங்கள் கழுகின் அமைப்பை பார்த்தே உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கழுகுகளை வேட்டையாடுவது கழுகின் இறகுகளை எடுப்பது கூட ஒரு சட்டவிரோதச் செயலாகவே கருதப்பட்டது. 

கழுகுகள் 40வயதை தாண்டியதும் அவற்றின் அலகு, நகங்கள் அதிக நீளமாக வளரத் தொடங்கும். அந்த நிலையில் அவற்றால் வேட்டையாட முடியாது.  எனவே அவை தமது இறகுகளையும் நகங்களையும் பாளைகளில் தேய்த்து உடைத்து தமது மறுபிறவியை தொடரும். சில அவற்றுக்கு பயந்து உணவின்றி இறந்து விடும். 

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.