சுவை தரும் கனி -08.

முள் சீத்தாப்பழம்(soursop).

முள் சீத்தாப்பழத்தின் தாயகம் அமெரிக்காவின் பிரேஸில் நாட்டு பகுதியை சார்ந்த அமேசான் காடுகள் ஆகும். பிலிபைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது. இம் மரங்கள் வெப்ப மண்டலத்தில் வளரக்கூடியனவாகும். வறட்சியை தாங்கக் கூடியனவாகும். சீதளப்பழம் என்பது மருவி சீத்தாப்பழம் என்றாகியது. இயற்கை தரும் ஐஸ்கிரீம் என்று புகழ்கின்றனர். 

முள் சீதாவானது வெப்ப மண்டலத்தைச் சார்ந்த தாவர இனமாகும். இம்மரம் சுமார் 20 அடி உயரம் வரை வளரக்கூடியதாகும். இதன் பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டதாகும். பொதுவாக இம்மரம் மே மாதத்தில் பூத்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பழம் தருவனவாகும்.

முள் சீத்தாப்பழங்கள் இதய வடிவம், நீள்வட்டம் அல்லது ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படுகிறது. இப்பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவையினைக் கொண்டுள்ளது. இப்பழத்தின் உட்புறச் சதையானது வெள்ளை நிறத்தில் கிரீம் போன்று காணப்படும். இதனுள் அடர் பழுப்புநிறம் அல்லது கறுப்பு நிற விதைகள் காணப்படுகின்றன.

முள் சீத்தாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, விற்றமின் A ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. முள் சீதாவின் இலை, மரப்பட்டை, வேர், கனிகள் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆயினும் இதன் பழங்களின் மருத்துவ குணம் பற்றி பார்ப்போம்.

வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தக்கூடியது.

பெண்கள் பலர் மாதவிடாய் சுழற்சியின் போது உடலில் நீர் தேங்குவதாக உணர்கின்றனர் இதனால் அவர்களுக்கு வீக்கம் ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் இதற்கு முள் சீத்தா பழம் உதவுகிறது. இதை சாப்பிடுவதால் உடலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். 

உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த முள் சீத்தா பழம் உதவுகிறது. எனவே அதிக கொழுப்பு கொண்டவர்கள் இதை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீமோதெரபி எனப்படும் சிகிச்சையை விட 10000மடங்கு அதிகம் பலன் தரக்கூடியதும். இரும்புசத்து அதிகம் உள்ளதால்  ரத்த சோகைக்கு நல்லது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளையும் முள் சீத்தாப்பழம் சரிசெய்யும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னையையும்கூட இந்தப் பழம் குணப்படுத்தும். 

முள் சீத்தாவில் உள்ள பொட்டாசியம் இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும். உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி  இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும். முள் சீத்தா மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கின்றது. 

முள் சீத்தாப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாட்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. முள் சீத்தா பழம் மற்றும் இலைகளை  கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். அதிகளவில் உட்கொள்ளாமல் சிறிய அளவில் உணபதனால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் முள் சீத்தா.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.