பிரமிக்க வைக்கும் தகவல் - 01.
சீனப்பெருஞ்சுவர்(Great Wall of China).
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பல சுவாரஸ்யமான தகவல்களையும் செய்திகளையும் கொண்ட நீண்ட தேடலாகவே இருக்கின்றது. சீனப் பெருஞ்சுவர் என்பதற்கு 'நீண்ட நகர் கொண்ட கோட்டை' என்பதே பொருளாகும். மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியாவிலிருந்தும் மஞ்ரியாவில் இருந்தும் வந்த காட்டு மிராண்டிகளின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசை காப்பதற்காக கட்டப்பட்ட அரணாகும்.சீனப் பெருஞ் சுவரானது பாலு நதியருகில் அமைந்துள்ள கொரியாவுடனான எல்லையில் இருந்து கோபிபாலைவனம் வரை 6400கிலோ மீற்றர் வரை நீண்டு செல்கின்றது. இச்சுவரின் சராசரி உயரம் 7.88 மீட்டர். ஒரு சில இடங்களில் இச்சுவர் 14 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. இச் சுவர் கட்டுவதற்கான பணிகள் கி.மு 208 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த போரினால் கட்டுமானப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டது. கி.மு 100இல் ஹான் வம்சத்தவரும் கி.பி 1368 இல் மிங் வம்சத்தினரும் கட்டினர்.
மிங் வம்சப் பெருஞ்சுவர் கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹி வாங்கடா வோவில் தொடங்குகிறது. 9 மாகாணங்களையும் 100கவுண்டிகளையும் கடந்து மேற்கு முனையில் வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு வாசலில் முடிவடைகின்றது. பெருஞ்சுவர் ஜியாயு முடிவடைகின்றபோதும் ஜியாயு கடவையும் தாண்டி பட்டுச் சபைளங் காவல் கோபுரங்கள் உருவாக்கப்பட்டன.
சீனாவின் முக்கிய படை அதிகாரியான சங்குயியை ஷவாய் கடவையின் கதவை திறந்துவிடச் சம்மதித்ததின் மூல்ம் மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். இதனால் எதிரிகள் சீனாவை எளிதில் கைப்பற்றினார்கள். யாரைத்தடுப்பதற்காக சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டு கொண்டிருந்ததால் பெருஞ்சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது.
அரசாங்கம் மக்களை சுவர் கட்டும் பணியில் ஈடுபடும்படி உத்தரவிட்டது. படைகளால் மக்கள் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். பலர் இறந்த காரணத்தால் இச்சுவர் உலகின் "அதிநீளமான மயானம்" என்று அழைக்கப்படுவதுண்டு.
சுவர் திருத்த வேலைகள் எதுவும் இன்றி சில கிராமங்களுக்கு விளையாட்டு மைதானமாகவும் வீடுகளும் சாலைகளும் அமைக்க எடுக்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்பட்டுள்ளன. கட்டுமானத் திட்டங்களின் போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. சீனப் பெருஞ்சுவர் சங்கம் சுவரை பாதுகாப்பதில்லை தற்போதுதான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் 2003 ஆம்ஆண்டு ஜுன் வரை சீன அரசாங்கம் சுவர் பாதுகாப்புக்கான எந்த பனிகளையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாற்று உள்ளது.
சீனப் பெருஞ்சுவர் 1987 இல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 1938 இல் ரிச்சர்ட் ஹரிபர்ட்டன் எழுதிய அதிசயங்களின் இரண்டாவது புத்தகத்தில் சந்திரனிலிருந்து பாரிக்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ்சுவர் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பெருஞ்சுவரின் நீளத்தை வைத்தே, எத்தனை பேர் எவ்வளவு கடின உழைப்பைக் கொட்டி இந்தப் பெருஞ்சுவரை உருவாக்கியிருப்பார்கள் என்று ஊகிக்க முடியும். பல நூற்றாண்டுகள் தாண்டி சீனப்பெருஞ்சுவர் கம்பீரமாக நின்றிருப்பதே இதன் வலிமைக்குச் சான்று!
Keep it up 💞
ReplyDelete