உயிரினத் தகவல் - 02.
எறும்பு தின்னியின் செதில்கள் கடினமானவை. இதன் ரோமங்கள் இயற்கையாகவே ஒன்றாகி செதில்களாக மாறுகின்றன. நீளவாக்கிலே 11லிருந்து 13 வரைக்கும் வரிவரியாக பெரிய செதில்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த மாதிரி பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் முக்கோணமாக கூர்மையாக இருக்கும். பாரம்பரிய சீன மருத்துவத்தில் எறும்பு தின்னியின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், சீனா, வியட்நாம் போன்ற இடங்களில் எறும்பு தின்னிகளின் இறைச்சி உண்ணப்படுகிறது.
ஆசியாவில் நான்கு வகையான எறும்பு தின்னிகள் உள்ளன. அவை இந்திய எறும்பு தின்னி, பிலிப்பைன் எறும்பு தின்னி, சுண்டா எறும்பு தின்னி மற்றும் சீன எறும்பு தின்னி , ஆப்ரிக்க மத்திய ரேகை பகுதியில் உள்ள மழைக்காடுகள் மற்றும் புல்வெளிகளில் காணப்படும் ராட்ச எறும்பு தின்னி இவை 1.8 மீட்டர் நீளமும் 30 கிலோ எடையும் கொண்டவை.
புலி போன்ற விலங்குகளுக்கு எறும்பு தின்னியை சாப்பிட மிகவும் பிடிக்கும் எதிரிகள் தாக்க வந்தால் மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துக்கொண்டு செதில்களை மேல் நோக்கி செங்குத்தாக வைத்துக் கொண்டு மிகவும் மோசமான வாசணையுடன் இருக்கின்ற மஞ்சள் திரவம் ஒன்றை தன்னுடைய வாலுக்கு பக்கத்தில் இருக்கின்ற சுரப்பியில் இருந்து பீச்சி அடிக்கும்.
இவை மண்னைத் தோண்டி வளைகளை அமைத்து வாழ்கின்றன. வளை தோண்டும் போது கூர்மையான பாறைகள் தோலைக் கிழிக்காமல் இருக்கவும் இந்த செதில்கள் பயன்படுகின்றது. மண்ணின் தன்மையை பொருத்தே மண்ணுக்கு அடியில் இவற்றின் வளை 2m இல் இருந்து 6m வரை ஆழமாக காணப்படும். எதிரிகளிடம் இருந்து தப்ப வளையின் வாசலை மண்ணைப் போட்டு மூடிக் கொள்ளும். செதில்களின் எடை எறும்பு தின்னியின் எடையை விட கால் பகுதியிலிருந்து மூன்றில் ஒரு பாகம் வரை கூட இருக்கும்.
எறும்பு தின்னி இரவில் மட்டும் நடமாடும். பகலில் வளைகளிலே சுருண்டு படுத்திருக்கும். காது மடல்கள் மிகவும் சிறியதாய் இருக்கும். ஒவ்வொரு காலிலும் ஐந்து கூர்மையான நகங்கள் இருக்கும். இதன் நாக்கில் உமிழ்நீர் அதிகமாக சரப்பதால் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும்.
இதனால் எறும்புகள், கறையான்கள் எள்தில் நாக்கில் ஒட்டிக்கொள்ளும். இதன் நாக்கு 23cm முதல் 25cm வரை நீண்டிருக்கும். எறும்பு தின்னிகளுக்கு கூர்மையான பார்வை மற்றும் கேட்கும் திறன் கிடையாது.
கறையான்கள் இருக்கும் புற்றுக்களை வாசனை மூல மாக கண்டுபிடிக்கும். பின்பு நகங்கள் மூலமாக இவ் விடத்தைத் தோண்டும். இதற்கு பல் இல்லாததால் இரையை அரைப்பதெல்லாம் வயிற்றுக்குள் தான் இடம்பெறுகிறது.
எறும்புதின்னி பிறந்த குட்டியின் செதில்கள் மிகவும் மென்மையாக இருக்கும். பிறந்தவுடன் தவழ்ந்து நடக்க ஆரம்பித்து விடும். ஒரு மாதம் வரை தாய் எறும்புத் தின்னியின் வாலின் அடிப்புறத்திலேயே பாதுகாப்பாக இருக்கும். எதிரிகள் தாக்க வந்தால் குட்டியை நடுவே மறைத்து சுருண்டு கொள்ளும்.
எறும்புத் தின்னியின் மாமிசத்திற்கும் செதில்களுக்கும் மருத்துவகுணம் இருப்பதாக நம்பிய ஆதிவாசிகள் இதனை அதிகமாக வேட்டையாடினர். இதன் காரணமாக இதன் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் கடத்தப்படும் பாலூட்டி எறும்பு தின்னியாகும். இதனை அறிந்து தாய்லாந்தை சேர்ந்த தாய் வாங் குயேன் என்ற நபர் எறும்பு தின்னிகளின் பாதுகாப்பிற்காக பணிபுரிந்து வருகிறார். அவர் 2014ஆம் ஆண்டு 'வியட்நாம் வைல்ட் லைஃப்' எனும் அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் அவர் இதுவரை 1500 பாங்கோலின்களை மீட்டுள்ளார்.
Comments
Post a Comment