உயிரினத் தகவல் - 03.

சிங்கம்(Lion).

சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்து ஆகும். காட்டுக்கே ராஜா என்ற பெருமையைப் பெற்ற விலங்கு, பெரிய பலசாலி என்றும் பெயரெடுத்த விலங்கு சிங்கம் தான். பூனைக் குடும்பம் என்றழைக்கப்படும் விலங்கின வகையில் சிங்கமும் ஒன்று. உலகத்தில் மிக அதிகமாக வாழும் இந்த வகை விலங்குகளில் சிங்கத்துக்கு இரண்டாம் இடம். 

சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்தஇலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். ஆண் சிங்கம் சுமார் 150kg முதல் 250kg எடை கொண்டதாக இருக்கும். ஆப்பிரிக்க வகை சிங்கங்களின் எடை சுமார் நூற்றுத்தொண்ணூறு கிலோ இருக்கும்.

உலகத்திலேயே மிக அதிக எடை கொண்ட சிங்கத்தின் எடை 312 கிலோவாக இருந்தது. இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது. பெண் சிங்கங்கள் பொதுவாக உருவத்தில் சிறிதாகவும் எடை குறைந்தவையாகவும் இருக்கும். அவை சுமார் நூற்று பதினேழு முதல் நூற்று அறுபத்து ஏழு கிலோ எடை கொண்டவையாக இருக்கும்.

பொதுவாக சிங்கங்கள் பத்து முதல் பதினான்கு ஆண்டு வரை உயிர் வாழக் கூடியவை. தகுந்த பாதுகாப்புடன் இருப்பின் இருபது வயது வரைகூட ஆயுட்காலம் நீடிக்கும். கடந்த இரண்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் சிங்கங்கள் அதிகம் காணப்பட்டன. அதற்கு முன்பு ஆப்பிரிக்க காட்டுப் பகுதியிலிருந்து சிங்கங்கள் ஐரோப்பாவின் போர்த்துக்கல் முதல் இந்தியா வரை பரவியிருக்க வேண்டும் என்று வரலாற்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் சிங்கம் என்பது அறவே அழிந்துவிட்ட விலங்காக மாறிவிட்டது. இப்போது வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிங்கங்களைப் பார்க்கவே முடியவில்லை. சில ஆசிய நாடுகளில் தான் சிங்கம் அதிகம் காணப்படுகிறது.

கடந்த 1990களின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் சிங்கங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 30 ஆயிரமாகக் குறைந்து விட்டது என்பது வேதனை. இந்த எண்ணிக்கை வெகு விரைவில் மேலும் குறையக்கூடும் அஞ்சப்படுகிறது.

சிங்கங்களில் பல வகைகள் உண்டு. கேப் சிங்கம், ஐரோப்பிய குகை சிங்கம், அமெரிக்க சிங்கம், துருவ சிங்கம் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். சிங்கங்கள் பெரிய குடும்பமாக வாழக் கூடியவை. ஒரு குடும்பத்தில் ஆண், பெண் என நிறைய சிங்கக்குட்டிகள் இருக்கும். குடும்பத் தலைவராக ஒரு ஆண் சிங்கமும், அதற்கு உதவியாக அதன் சகோதர சிங்கமும் இருப்பது வழக்கம். வளர்ந்த பெண் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பெண் சிங்கம்தான் வேட்டையாடுவதில் தேர்ந்தவை என்று இதுநாள் வரை நம்பப்பட்டது. அதாவது பெண் சிங்கம்தான் குடும்பத்துக்கு அதிக உணவு தேடித்தருமாம். ஆனால் அண்மையில் நடந்த ஆராய்ச்சியில் ஆண் சிங்கங்களும் கூட வேட்டையாடுவதில் தேர்ச்சி பெற்றவை என்பது தெளிவாகி உள்ளது.

ஒரு ஆண் சிங்கம் என்பது மூன்று வயதிலேயே எல்லாவிதத்திலும் தேர்ச்சி பெற்றதாக ஆகிவிடும். அப்போது வேட்டையாடுவதிலிருந்து தன்னைக் தற்காத்துக் கொள்வது வரை அனைத்தும் அதற்கு அத்துப்படிதான். பிறகு தனக்கென ஒரு குழுவை அல்லது குடும்பத்தை அமைத்துக் கொண்டு அது வாழத் தொடங்கும். சுமார் எட்டு வயதான பிறகு சிங்கங்களின் உடல் வலிமை குறைந்து விடுகிறது.

சிங்கங்களால் பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்து அதிகம் இல்லை பசியாக இருந்தாலோ, கோபப்பட்டாலோ மட்டுமே மனிதர்களை அவை தாக்கும். புலிகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களைத் தாக்கும் சிங்கங்களின் எண்ணிக்கையும்,போக்கும் குறைவுதான். பூனைக்குடும்பத்தில் புலிகள் மட்டுமே மனிதர்களை அதிகம் தாக்குகின்றன.

சிங்கம் என்பது அரசகுடும்பத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. பண்டைக்காலம் முதல் இப்போது வரை பல அரசவம்சங்கள் சிங்கத்தை அரசமுத்திரையாகப் பயன்படுத்திவருவது வழக்கமாக இருக்கிறது.

இங்கிலாந்து மற்றும் எத்தியோப்பாவில் பேரரசுக்களின் சின்னமாக சிங்கம் விளங்குகிறது. சீனக் கலை கலாசாரத்தில் சிங்கத்துக்கு முக்கிய பங்கு ண்டு இத்தனைக்கும் சீனாவில் சிங்கம் வாழ்ந்ததாக சான்று இல்லை. கலை இலக்கியம் கலாசாரம் ஆகியவற்றில் வேறு எந்த மிருகத்தையும் விட சிங்கத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதற்கும் பொருந்தும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.