சுவை தரும் கனி - 05.

பப்பாளிப்பழம்(papaya).

பப்பாளி அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டு எல்லா காலங்களிலும், விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதால் பப்பாளிப்பழம் ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படுகிறது. பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ ஆகும். பப்பாளியானது Caricaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. பப்பாளி மரவகையை சார்ந்ததாகும். பப்பாளியை பறங்கிக்காய் என்றும் அழைப்பார்கள்.

பப்பாளி பழம் மஞ்சள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் கலந்து காணப்படுகிறது. பப்பாளியின் இலைகள் கைவடிவத்தில் அகலமாக ஆமணக்கு இலை போன்று காணப்படும். பப்பாளி மரத்தின் தண்டுப்பகுதி நீண்டு, உட்பகுதி குழல் போன்று இருக்கும். இதனால் காற்று காலங்களில் பப்பாளிமரம் எளிதில் உடைந்து விடும். பப்பாளி மரங்கள் களி மண்ணில் வளரக்கூடியனவாகும். மலைப் பகுதிகளில் வளரும் பப்பாளி மரங்கள் அதிகமான உயரத்துடனும், பெரிய காய்களும் காய்க்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். பப்பாளி விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு மிளகு போன்றிருக்கும்.

பப்பாளியில் ஆண் பப்பாளி, பெண் பப்பாளி மரம் என்று இரண்டு வகை உண்டு. ஆண் பப்பாளி மரத்தில் பூக்கள் வெள்ளை மற்றும் இளம்மஞ்சள் நிறங்களில் கொத்துக்களாக காணப்படும். காய்கள் இருக்காது. பெண் பப்பாளியில் பூக்கள் வெள்ளை நிறமாகும். பெண் பப்பாளி மரத்தில் மட்டுமே காய்கள் மற்றும் பழங்கள் உண்டாகின்றன.

பப்பாளியில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், புரதம்,  நார்ச்சத்து , விற்றமின் C, கொழுப்பு, சக்கரைச் சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பப்பாளியின் இலை, காய், பழம், பால் இவைகள் மருந்தாக பயன்படுகின்றன. பப்பாளிப்பழங்களின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பப்பாளியானது பொதுவாக உணவினை நன்கு சமிபாடடையசெய்கிறது. மாமிசம் எளிதில் ஜீரணமாக பப்பாளி உதவுகின்றது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும் பப்பாளிப்பழம் பயன்படுகிறது. 

கீல்வாதம் நம்மை பலவீனப்படுத்தும் நோயாகும். பப்பாளி நம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் விட்டமின் C உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய காணப்படுகின்றன. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதைத் தவிர கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது.

மனித உடலில் இருக்கும் நரம்புகள் பலப்படுத்தும் ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த ஓட்டம் உண்டாகும். ஞாபக சக்தி உண்டு பண்ணவும் இந்த பப்பாளிப்பழம் பயன்படுகிறது. பப்பாளி பழம் நம் உடலில் பசியை கட்படுத்துவதோடு நீண்ட நேரம் வயிற்றை திருப்தியாக உணர வைக்கிறது. பெண்களும் மாதவிடாய் காலத்தில் சீராக போகாமல் இருப்பவர்கள் அடிக்கடி பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் அவை நமக்கு சரியான பலன் தரும். 

மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன. ஆனால் பப்பாளியில் சாப்பிட்டால் நன்மை உண்டாகும் நம் உடலில் இருக்கும் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை இந்த பப்பாளி பழத்திற்கு உண்டு.  புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க பப்பாளியில் பீட்டா கரோட்டின் அதிகளவு காணப்படுகிறது.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். இதில் விட்டமின் C போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பயன்படுகிறது.

பெண்களின் அழகு சாதனங்களில் உதவும் பழம் பப்பாளி. சருமத்தில் உள்ள பரு, மரு, கரும்புள்ளிகள் இவற்றை நீக்கும் ஆற்றல் கொண்டது. தினமும் ஒரு சிறுதுண்டு பப்பாளிப்பழம், அதனுடன் ஒரு டம்ளர் காய்ச்சிய பால் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.

இவ்வாறு நமது உடலுக்கு சத்துக்களை கொடுத்து உடலை பாதுகாக்கும் பப்பாளி பழத்தை ஜூஸ் செய்து குடிப்பது சிறந்ததாகும். பாப்பாளி ஜூஸ் எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்.

பப்பாளிப்பழம் 01 , சீனி தேவையான அளவு,  எலுமிச்சை சாறு - தேவையான அளவு புதினா இலை  05 , ஜஸ் கட்டி - சிறிதளவு.

செய்முறை.

பப்பாளிப்பழத்தை தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சம் ஜுஸ், சீனி, ஐஸ் கட்டிகள் ஆகிய பொருட்களை சேர்த்து ஒரு அடி அடித்து ஒரு கண்ணாடி குவளையில் ஊற்றி மேலே புதினா இலைகளைத் தூவி  அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

பப்பாளியானது மாதவிடாயைத் தூண்டிவிடுவதால் கர்ப்பிணிப் பெண்கள் இதனை தவிர்ப்பது நலம். அளவுக்கு அதிகமாக பப்பாளி பழத்தை உண்டால் வாந்தி, வயிற்று வலி, குமட்டல் ஆகியவை ஏற்படும். எனவே இப்பழத்தை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்தால் நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.