சுவையூட்டி - 02.

பூண்டு/ வெள்ளைப்பூடு(Garlic).

இன்றைய காலகட்டத்தில் பூண்டானது மருத்துவ பொருளாகவும் உணவாகவும் பயன்படுகிறது. இதேபோல் பண்டைய காலத்திலும் பூண்டினை இவ்வாறு பயன்பாடுத்தியமைக்கான சான்று உள்ளது. கி.மு 2300 ஆண்டு பகுதியில் சுமேதரிய கல்வெட்டுக்கள் பூண்டினை உணவுகளுடன் பயன்படுத்தியமைக்கான சான்று காணப்படுகின்றது.

பூண்டின் தாயகம் சரியாக கண்டறியப்பட வில்லை என்றாலும் மத்திய ஆசிய பகுதிகளில் பூண்டு விளந்த தடயம் காணப்படுவதாக 1875 ஆம் ஆண்டு எட்வேர் ரீகல் என்ற ஜேர்மனிய தாவரவியளாலர் கூறியுள்ளார். பூண்டின் தாயகம் தெளிவாக அறியப்படாவிட்டாலும் பூண்டினை பயன்படுத்தியதற்கான ஆதாரம் காணப்படுகின்றது.

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதன் தமது உணவில் பூண்டை பயன்படுத்தியமைக்கான படிமங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எகிப்தியர்கள் தமது உணவில் பூண்டி பயன்படுத்தியதோடு மருந்தாகவும் பயன்படுத்தினர்கள். அத்தோடு தமது இறைவனுக்கு படைத்தமைக்கான சான்றுகளும் உள்ளன. இதுக்கு சான்றாக கி.மு 2700 காலப்பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் எகிப்திய மக்கள் தம் கடவுளர்க்கு பூண்டு மற்றும் வெங்காயத்தை படைப்பது போல் உள்ளது.

அத்தோடு பூண்டினை மருத்துவப் பொருளாக மதித்து பண்டைய மம்மிகளில் புதைத்து வைத்தனர். அத்தோடு மன்னர்களின் பிரமிட்களிலும் சித்திரமாக தீட்டியுள்ளார்கள். அத்தோடு எகிப்திய மக்கள் பூண்டினை ஒரு பணமாற்று பொருளாகவும் பயன்படுத்தின குறிப்பாக பூண்டினை கொடுத்து ஒரு அடிமையை வாங்கக்கூடிய அளவுக்கு பூண்டு பெருமதியாக காணப்பட்டது. கிரேக்கர்கள் பூண்டி எண்ணையை போர்க்கருவியாக பயன்படுத்தினர். யூதர்களும் பூண்டினை விரும்பி உண்டதாக பைபிள் ஆதாரங்கள் கூறுகின்றன.

சீனர்களும் கி.மு 2000 ஆண்டுக்கு முன் ப பூண்டினை மருத்துவ பொருளாக பயன்படுத்திக்கான சான்று சீனர்களின் மருத்துவ குறிப்புகளில் உள்ளது. அத்தோடு சீனர்கள் பூண்டினை பயன்படுத்தி கண்ணாடி மற்றும் கடதாசி ஆகியவற்றை ஒட்டியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன. அத்தோடு கிரேக்க மருத்துவர் கிப்பேகிரேட்ஸ்(Hippocrates) பூண்டு நுரையீரல் பிரச்சினைக்கு சிறந்தது எனக் கூறுகிறார்.  

தமிழர்களும் சங்க காலத்தில் இருந்தே பூண்டை பயன்படுத்தியுள்ளனர். பூண்டை அக்காலத்தில் "உள்ளி" என்று அழைத்தனர். இதற்கு நெடுநல்வாடை பின்வரும் பாடலில் சான்றளிக்கிறது. 

"புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு 

உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து 

பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில்." 

                                                  நெடு 121-123

பூண்டானது உழைக்கும் தொழிலாளிகள் அதாவது ஏழைகளின் அடிப்படை உணவாக காணப்பட்டதால் ரோமானியர் காலத்தில் பூண்டு அரச குடும்ப உணவுகளில் இருந்து புறந்தள்ளப் பட்டதுடன் பூண்டு உண்ணும் மக்களையும் சமூகத்தில் ஒதுக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக உருவாகியது. இன்றும் சில இடங்களில் இவ்வாறு உள்ளது.

பூண்டானது bulb என்ற காய்கறி வகையைச் சார்ந்ததாகும். உலகின் 80% பூண்டு உற்பத்தி செய்யும் நாடு சீனாவாகும். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 2025 ஆம் ஆண்டு பூண்டின் உற்பத்தியளவு 31 பில்லியன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் கொடைக்கானலில் பயிரிடப்படும் மலைப்பூண்டிற்கு மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. 

பூண்டு பலரால் விரும்பப்படக் காரணம் அதன் வாசணையாகும். இவ் வாசணைக்கு காரணம் பூண்டில் இருக்கும் Allicin என்ற பொருளாகும். 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் பூண்டால் பக்றீரியாக்களை அழிக்க முடியும் என்பது ஆய்வு மூலம் நிறுபிக்கப்பட்டது. இன்றும் பல மக்கள் பூண்டினை மருத்துவப் பொருளாக பயன்படுத்துகின்றனர். வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இவ்வாறு பூண்டு நம் வாழ்வில் இணைந்து காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சுய கற்றல்.

ஆரோக்கிய வாழ்க்கை.

ஆரோக்கிய வாழ்க்கை.