உயிரினத் தகவல் - 07.
எலிகள்(Rats).🐁🐁🐭
எலி என்றாலே மனிதனை அலறவிடுகின்ற ஓர் சிறு வகை உயிரினமாகும். மனிதனால் எதிரியாக பார்க்கப்படும் உயிராகவும் உள்ளது. இதற்கு காரணம் மனிதனைப் போலவே எலிகளும் சிந்திக்க கூடிய திறமை கொண்டவை. உலகிலே மொத்தமாக 2 பில்லியன் கணக்கான எலிகள் வாழுகின்றன.
எலிகள் முதல் முதலில் இருந்தது ஆசிய கண்டத்தில் ஆகும். இவை வணிகத்திற்காக சென்ற கப்பல்களின் மூலமாகவே மற்றைய நாடுகளை சென்றடைந்தன. சங்க கால இலக்கியங்களான சீவக சிந்தாமணி, நற்றினை ஆகிய நூல்களில் எலி பற்றிய கருத்துக்கள் உள்ளன.
எலிகளில் சுமார் 60வகையான எலி இனங்கள் காணப்படுகின்றன. மூஞ்சூரு, வெள்ளை எலி, கள்ள எலி, சுண்டெலி, பெருச்சாளி, வயல் எலி ஆகியவையும் இவற்றுள் அடங்கும். உலகிலே மிகப் பெரிய எலியாக இருப்பது பப்பூவா நியூக்கினி இல் கண்டு பிடிக்கப்பட்ட பொசாவி வுல்லி(Bosavi woolly) எலியாகும். இது சுமார் 1.5kg எடையுடையதாகும்.
எலிகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை 8 - 12குட்டிகளை ஈனக்கூடியன. இக்குட்டிகள் சரியாக மூன்று மாதங்களில் குட்டி ஈனும். எலிகள் பொந்துகளில் வாழக் கூடியவையாகும். தனது பொந்தில் பஞ்சு போல அமைத்து சொகுசாக வாழும். எலிகளின் கண்கள் பக்கவாட்டில் அமைந்திருப்பதால் தம்மை சுற்றியுள்ள அனைத்து பக்கங்களையும் கவனிக்க முடியும் அவற்றால்.
வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக்குகள், இரும்பு, செப்பு, பலகைகள், கடதாசி, துணி என அனைத்துப் பொருட்களிலும் தனது பற்களின் முத்திரையை பதிப்பதில் அதி திறமைசாலிகள் இந்த எலிகள். ஆனால் எலிகள் அவற்றை உணவாக உட்கொள்வதற்காக அவற்றை கொறிப்பதில்லை.எலி கொறிந்துண்ணி வகையை சார்ந்த ஓர் உயிரினமாகும். அதாவது எலிகளின் முன் இரண்டு பற்களும் வளரக்கூடியவையாகும். அப் பற்கள் வளர்ந்தால் எலிகளால் உண்ண முடியாது ஆகையால் தான் தனது கண்களில் அகப்படும் பொருட்களை கொறித்துக் கொறித்து தனது பல்லின் அளவை கட்டுப்படுத்தி வைக்கின்றன.
இன்றைய நாட்களில் எலிகள் மூலம் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இன்று மட்டுமல்ல 1347 ஆம் ஆண்டு ஐரோப்பிய துறைமுகம் நோக்கி வந்த கப்பலில் இருந்த மனிதர்களிற்கு இருந்த பிளேக் நோயால் ஐரோப்பா தனது மொத்த சனத் தொகையில் 1/3 பங்கு மக்களை தொலைத்தது. இவற்றுக்கு முக்கிய காரணம் எலிகளேயாகும். இவ்றாக மனிதனுக்கு சேதம் விளைவிக்கும் எலிகளை முழுமையாக கொல்ல பல நாடுகள் திட்டமிடுகின்றன. அற்றுள் நியூஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது.
Comments
Post a Comment