உயிரினத் தகவல் - 08.

கரப்பான் பூச்சி(Cockraoches).

பூச்சிகள் என்றாலே மனிதன் பயப்படுகின்ற ஒரு உயிரினம் தான். இதில் கர்ப்பம் பூச்சியை மிக மிகப் பயங்கரமானதாக உள்ளது. இதற்குக் காரணம் கரப்பான் பூச்சியினால் மனிதனுக்கு ஏற்படுகின்ற அழர்ச்சி மற்றும் பல்வேறுபட்ட நோய்களே ஆகும். கரப்பான் பூச்சி சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே இந்த உலகில் தோன்றிய ஒரு அதிசய உயிரினமாகவே உள்ளது. கரப்பான் பூச்சிகளால் மிகப்பெரிய அதாவது அணுகுண்டு அறிவைக் கூட தாங்கக் கூடிய ஒரு சக்தி உள்ளது.

உலகம் முழுவதும் மொத்தமாக நாலாயிரத்திற்கும் அதிகமான கரப்பான் பூச்சி வகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகக் குறைந்த அளவான வகையை மனிதர்களோடு புலங்கக் கூடிய கரப்பான் பூச்சிகளாக காணப்படுகின்றன. கரப்பான் பூச்சிகளால் நீருக்குள் மூச்சு விடாமல் மூழ்கி இருக்க முடியும். சுமார் 40 நிமிடங்கள் நீருக்குள் மூழ்கி இருக்கக் கூடியவை இந்த கரப்பான் பூச்சிகள்.

வெப்பமான காலநிலையில் கரப்பான் பூச்சிகள் எளிதாக இனப்பெருக்கம் செய்கின்றன. கரப்பான் பூச்சிகள் இரண்டு நீண்ட கொம்புகளையும் பறக்க உதவும் இரண்டு சிறிய இறக்கைகளையும் கொண்டுள்ளன. இவற்றோடு உடலில் காணப்படும் துவாரங்களை பயன்படுத்தி சுவாசிக்கின்றன. உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி தென் அமெரிக்காவில் 6 அங்குலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கரப்பான் பூச்சிகள் என்றாலே மிகவும் வேகமாக ஓடக்கூடிய ஒரு பூச்சிவகை. கரப்பான் பூச்சியும் மனிதர்களை போலவே அனைத்துண்ணியாகும். கரப்பான் பூச்சிகள் தம் உணவாக பசைகள், கடதாசிகள், கழிவுப்பொருட்கள் கழிவு உணவுகள், இனிப்புகள் ஆகியவற்றை உட்கொள்ளக் கூடியது. 

இவ்வாறு மனிதனுக்கு தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சிகளை அழிப்பதற்கு மனிதன் முயற்சிகளின் ஈடுபட்டுக்கொண்டே தான் இருக்கின்றான். அப்படி இருந்தால் மனிதனால் இன்று வரை பிறப்பால் புத்திகளை கொள்ளும் வழி தெரியாமலே உள்ளது. இதற்கு முதன்மை காரணமாக இருப்பது கரப்பான் பூச்சிகளின் தலை துண்டிக்கப்பட்டாலும் அவை ஒரு வாரத்துக்கு உயிர் வாழக்கூடிய ஒரு அதிசய பூச்சி வகையாகவே உள்ளது.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.