சர்வாதிகாரி - 01.

இடி அமீன்(Idi Amin).

உலகிலே மிக மிக கொடுரமான சர்வாதிகாரி இடி அமீன் என்பவரேயாவர். இருப்பினும் அவரை மிகக் குறைவானவர்களே அறிந்துள்ளனர். இடி அமீன் என்பவர் ஒரு சர்வாதிகாரி என்று மட்டுமே அறிந்துள்ளனர். அவரின் கொடுர ஆட்சி பற்றி பார்ப்போம்.

இடி அமீனை ஒரு கொடுர கொலைகாரனாக எண்ணக் காரணம் எவ்விதக் கொள்கையும் இன்றி பதவி வெறிக்காக லட்சம் கணக்கிலான மக்களை கொன்று குவித்த மனித மிருகமாகும். ஆபிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்ட என்ற நாட்டின் வட பகுதியில் பிறந்தவர் இடி அமீன். பிரித்தானியரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த உகாண்டாவில் அக்காலத்தில் பிறப்பு பதிவுகள் முறையாக இல்லாத காரணத்தால் இடி அமீன் பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை. இவ்வாறு  இருப்பினும் 1920 - 1930 ஆண்டு காலப்பகுதியில் இடி கூறப்படுகிறது.

இடி அமீன்னின் தந்தை அமீன் தாதா. இவர் பிறப்பிலேயே கிறிஸ்துவராக இருந்தவர். இடி அமீன்னின் தாய் அஸ்சா ஆட்டே. இவர் ஒரு இஸ்லாமிய பெண் ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே இடி அமீன். இவரது குடும்பத்தில் மூத்த புதல்வர் ஆவர். இவரது சிறு வயதில் இவரது தந்தை இவரையும் இவரது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதனால் ஏழ்மை சூழலில் வாழ்ந்தார். இச் சூழ்நிலையினால் இடி அமீன்  நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். அத்தோடு படிப்பை கைவிட்டுப் பின்னர் ஒரு ராணுவ முகாமில் சமையல்காரர் ஆக வேலைக்கு சேர்ந்து தனது முயற்சியினால் ஒரு தனிப்படைக்கு சிற்பாயாக பதவியேற்றார். இவருக்கு 7 மனைவிகளும் 40க்கு மேற்பட்ட குழந்தைகளும் இருந்தனர். பெரிய படிப்பறிவற்ற இவன் தனக்கு தானே பட்டங்களை சூட்டிக் கொண்ட அரக்கன்.

அச் சமயம் கென்யாவில் இடம் பெற்ற பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதற்காக உகாண்டாவில் இருந்த சென்ற ராணுவப் படையுடன் சேர்ந்து இடி அமீனும் சென்றார். அப்போரின் தனது முழு திறமையை வெளிப்படுத்தி சாதாரண சிப்பாய் என்று பதவியில் இருந்து ஒரு சாஜனாக பதவி உயர்ந்தார். பின்னர் தன்னை முழுமையாக பிரித்தானிய அரசுக்கு விசுவாசியாக மாற்றிக் கொண்டு அடுத்த அடுத்த பதவி உயர்வுகளை அடைந்தார்.

1962 ஆம் வருடம் பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த உகாண்டாவிற்கு பிரதம பதவியேற்ற Apollo Milton Obote உடன் சிறந்த நட்பில் இருந்ததால் அக்காலத்தின் உச்ச கட்ட இராணுவத் தளபதிப் பதவியில் இருந்தார் இடி அமீன். இடி அமீன் ஒரு சர்வாதிகாரியாக மாறக் காரணம் Milton ஆவார். Milton இராணுவ கட்டுபாட்டை வைத்து பாராளுமன்றத்தை கலைத்து ஒரு நாடு ஒரு தலைவன் என்று உகாண்டா நாட்டு மக்களை தனக்கு கீழ் கொண்டு வந்து தன்னை ஒரு தலைவனாக்கி கொள்வதற்காக இராணுவத்தின் தலை தளபதியாகிய இடி அமீனை வைத்து இராணுவத்தின் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்றினார்.

பின்னர் இடி அமீன் தனக்கு சொந்தமாக வடக்கு சார்ந்த ஓர் படையை திரட்டினார் அதாவது தனக்கு சார்பாக உள்ளவர்களை ஒரு படையாக திரட்டினார். இந்த விடயம் மில்டனுக்கு தெரிய வர இராணுவத்தில் இருந்து நிதியை திரட்டி தனது சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார் என்று இடி அமீனை சிறையிலிட்டு பின் நாடு முழுவதையும் தனக்கு கீழ் கொண்டுவர மில்டன் தீட்டிய திட்டம் இடி அமீனுக்கு தெரிய வர மில்டன் மாநாட்டுக்காக சிங்பூர் சென்ற சமயம் தனக்கு சார்பான படையை பயன்படுத்தி உகாண்டா முழுவதையும் இடிய அமீன் தனது இராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து தன்னை தானே நாட்டு அதிபராக பிரகடனப்படுத்தினார்.

மற்றுமேரு சிறந்த ஆட்சியாளன் வரும் வரை இந்த முழு உகாண்டாவையும் பாதுகாப்பதே எனது இராணுவத்தின் கடமை என கூறி பதவி பொறுப்பை ஏற்றார். முழு உகாண்டாவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்ற எண்ணத்தோடு முழுமையாக தனது பதவிக்காக மட்டுமே இடி அமீன் உத்தரவுகளை பிறப்பிக்க தொடங்கும் போது உகாண்டாவை முழு இருள் சூழ்ந்தது.

தன்னை ஒரு தலைவனாக மக்கள் எப்போதும் தன்னை கொண்டாட வேண்டும் என்பதை விரும்பி மக்களை துன்பப்படுத்தும் உத்தரவுகளையும் ஈட்டார். இதற்கு எதிராக குரல் வரும் திசையே சர்வநாசம் அடையும் அளவுக்கு கொடுரமாக ஆட்சியை தொடர்ந்தார். சில மேசமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். பிரித்தானியர் ஆட்சிக் காலப்பகுதியில் வீதி கட்டுமானப்பணி மற்றும் தொழிற்சாலை பணிகளுக்காக இந்தியாவில் இருந்து தொழிலாளர் மக்களையும் வணிகர்களையும் உகாண்டா உள் வாங்கியது. இவ் ஆசிய வம்சாவழிகள் உகாண்டாவின் செல்வத்தை வைத்து பணமீட்டுவதை கண்டு அவர்களை சொத்துக்களை விட்டுவிட்டு 80நாட்களுக்குள் நாட்டை விட்டு விரட்டி அடித்தார் இடி அமீன்.

இடி அமீன் தனது சுகபோகத்திற்காக மக்களிடம் எல்லையற்ற வரிகளை விதித்து பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியதோடு இதனை எதிர்த்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தான் இடி அமீன். இவ்வாறு மக்களை அடக்க நவீன ஆயுத உதவியை நாடி இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை நாட பணத் தேவை ஏற்பட்டது. எனவே லிபியாவில் இராணுவம் மற்றும் ஆயுதங்கள் கிடைந்தன. அத்தோடு இஸ்ரேல், பிரித்தானியா ஆகிய நாடுகளை எதிர்த்தார்.

இஸ்ரேலின் யூதர்களை வெளியேற்றியதோடு இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனர்களுக்கும் தஞ்சம் கொடுத்து இவர்களை வைத்து இஸ்ரேல் விமானத்தை கடத்தி யூதர்களை பணயக்கைதிகளாக்கினான் இடி அமீன் இஸ்ரேல் உகாண்டாவை கென்யாவின் உதவியுடன் தாக்கி பயணிகளை மீட்டனர். இதனால் உகாண்டாவில் இருந்த அத்தனை கென்ய மக்களையும் இராணுத்தை கொண்டு கொன்று குவித்தான் இந்த கொடிய அரக்கன். 

உகாண்டாவின் முன்னால் அதிபர் மில்டனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தான்சானிய அதிபர் ஜூலியஸ் நைய்ர் மேல் திரும்ப 1978இல் தான்சானியாக்கு எதிராக போர் தொடுத்தார் இட் அமீன். இப்போரில் வல்லரசு நாடுகளின் உதவி கிடைக்காமையால் தோல்வியை தழுவிய இடி அமீன் லிபியாவுக்கு தனது குடும்பத்தோடு தப்பிச் சென்று சவுதி அரேபியாவை அடையந்தார். இங்கு போதிய அளவு வசதி கிடைத்தது. 

உடல் உறுப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சவுதி அரேபியாவிலே 2003 ஆம் ஆண்டு கோமா நிலையில் மிக துன்பப்பட்டு வசதி இன்றி தனது உயிரை துறந்தார் இடி அமீன். மக்களை கொன்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவனின் பிள்ளைகள் சிலர் உண்ண உணவு கூட இன்றி கஸ்டப்பட்டுள்ளனர். தான் செய்த பிழை தனது அடுத்த தலைமுறையையும் பழி தீர்த்துள்ளது.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.