காய்கறி - 01.

தக்காளி(Tomato).

தக்காளியின் தாயகம் தென்னமெரிக்கா ஆகும். குறிப்பாக தென்னமெரிக்காவின் பெரூ, ஆயன்டினா ஆகிய பகுதிகளில் தான் தக்காளி கண்டறியப்பட்டது. கி.மு.500 ற்கு முன்னர் அமெரிக்க மக்கள் தக்காளியை விவசாயப் பயிராக பயிரிட்டிருக்கின்றனர். அதிலும் மாய நாகரிக மக்களே தக்காளியை அக்காலத்தில் சிறப்பாக பயிரிட்டனர்.

தக்காளிக்கு  மிகப்பெரிய வரலாறு இருந்திருக்கிறது. இவர்கள் தக்காளியை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தியுள்ளனர். தக்காளியை ஆங்கிலத்தில் Tomato என்று அழைக்கப்படுகின்றது. Tomato என்ற சொல்லானது அமெரிக்காவின் பழங்குடியினரான ஆஸ்டிக் மக்களின் மொழியான nahuatl என்ற மொழியில் இருந்து தோன்றியதாகும். அதில் Tomatl என்ற சொல்லே மருவி Tomato என்று ஆகியது.

தங்காளியை முதன் முதலில் உலகொங்கும் பரப்பியவர் ஐரோப்பியராவர். 1521 இல் மெக்சிக்கோவில் இருந்து ஐரோப்பாவுக்கு  Hernan cortes என்ற ஸ்பானியரே கொண்டு சென்றார். இத் தக்காளி மஞ்சள் நிறமாக காணப்பட்டதால் இதை ஐரோப்பாவில் தங்க ஆப்பிள் என அழைத்தனர். பின்னர் போர்த்துகீசரால் இந்தியாவுக்கு அறுமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தக்காளியின் தேவை அதிகரிக்க அதிகரிக்க தக்காளி பயிர்ச்செய்கையும் அனைத்து நாடுகளிலும் அதிகமாகியது.

தக்காளி ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் விரும்பி சாப்பிட்டனர். அவர்கள் பயன்படுத்திய pewter என்ற பாத்திரத்தில் தக்காளியை வைத்து உண்டதால் அப்பாத்திரத்துடன் சேர்ந்த தக்காளியின் அமிலம் உடலில் நச்சு தன்மையை ஏற்படுத்தியதால் பலர் இறந்தனர். இதனை அம் மக்கள் தக்காளியை விஷப்பழம் என நினைத்து வெறுத்தனர். இதனை அமெரிக்காவின் மூன்றாவது அதிபரான தோமஸ் ஜெபர்சன் தக்காளியை மக்கள் முன்னிலையில் உண்டு தக்காளி உண்ணக் கூடிய விஷம் அற்ற பழம் என்பதை நிறுபித்தார்.

தக்காளி இவ்வாறு சாதாரணமாக உணவில் இடம் பெற்றாலும் 1812 காலப்பகுதியில் ஜேம்ஸ் மீஸ் என்பவர் தக்காளியை பயன்படுத்தி சீனி மற்றும் விநாகிரி இல்லாத சோஸ் என்ற ஒரு பதார்த்தத்தை உருவாக்கினார். இதுவே பின்னர் சீனி மற்றும் வேறு பதார்த்தங்களை சேர்த்து உருவாக்கிய சோஸ் மனித உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தியது. பின்னர் ஹென்றி ஹெய்ன்ஸ் என்பவர் உருவாக்கிய ஹெய்ன்ஸ்(Heinz) என்ற சோஸ் ஆகும் இது இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

தக்காளியில் விற்றமின் C, K, கல்சியம், இரும்பு ஆகியவை காணப்படுகிறது. தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம்  உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. தக்காளி மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. தக்காளி சரும நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது. தக்காளி வாய்ப் புண், வயிற்றுப்புண், குடற்புண், தொண்டைப்புண்ணை ஆற்றக்கூடியது. தக்காளி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் எரிச்சல் குணமாகிறது. சிறுநீரில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. 

1945 இல் இருந்து ஸ்பெயின் என்ற நாட்டில் லாட் டொமடனோ என்ற ஒரு திரு விழாவில் ஒருவரை ஒருவர் தக்காளி பழம் எறிந்து அடித்து விளையாடுவார்கள். 

தக்காளியில் இன்று 1,0000 வகைகள் காணப்படுகின்றது. தக்காளி ஏழைகளின் அப்பிள் என்று அழைக்கப்பட்ட போதிலும் இன்று தக்காளியின் விலை அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் அதிக வெயில் மற்றும் மழையால் தக்காளிப் பயிர்ச் செய்கை பாதிக்கப்படுவதேயாகும்.

Comments

Popular posts from this blog

சுய கற்றல்.

ஆரோக்கிய வாழ்க்கை.

ஆரோக்கிய வாழ்க்கை.