உயிரினத் தகவல் - 09.
அணில்(Squirrels).
உலகிலே மிகச் சிறந்த திருடன் அணில்களாகும். சுமார் 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய ஒரு உயிரினமாக அணி உள்ளது. மரத்திலே மிக வேகமாக ஏறக்கூடிய ஒரு உயிரினங்கள் அணிலும் ஒன்றாகும். அணில்கள் ஆங்கிலத்தில் Squirrel என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல்லாகும். தமிழில் அணில் உறுத்தை, வெளில், வரிபுறம் என அழைப்பதுண்டு.
அணிகள் மொத்தமாக 287 வகையான அணில்கள் இன்று வரை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வளவு வகைகள் இருந்தாலும் நமது சூழலில் அடிக்கடி நம்மால் பார்க்கக்கூடிய அணில் வகைகள் வரி அணில்களாகும். இதை மூன்று அல்லது ஐந்து கோடுகளை முதுகில் கொண்டதாக காணப்படும். அணில் பழங்கள், நிலக்கடலைகள், பூச்சிவகைகள், இலைகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.
அணில்கள் மொத்தமாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நிலத்தில் வாழும் அணில்கள் பறக்கும் அணில்கள் மரத்தில் வாழும் அணிகள் என்பனவாகும். பறக்கும் அணில்கள் சுமார் 300 அடி உயரம் உள்ள மரத்திலிருந்து கூட மட்டும் ஒரு மரத்திற்கு தாவக்கூடிய இயல்பு கொண்டவை ஆகும். அணிகளால் சுமார் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு கூட பாய முடியும்.
அணில் ஒரு கொறித்துண்ணி வகையாகும். எலிகளைப் போன்றே அணில்களுக்கும் முன் பற்கள் வளர்ந்து கொண்டே இருப்பதால் அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுதுவதற்கு அணில்கள் கொறித்து கொண்டே இருக்கும். அணில்கள் வாலை அசைத்தும் வித்தியாசமான சத்தங்களை எழுப்பியும் தொடர்புகொள்கின்றன.
அணில்கள் சுமார் நூறு அடி உயரம் கொண்ட மரங்களில் இருந்து கீழே விழுந்தாலும் எவ்வித உயிர்ச்சேதம் என்று பாதுகாப்பாக பாய்ந்து ஓடக்கூடியவை. அணில்கள் இனப்பெருக்க காலம் பெப்ரவரி முதல் மே மாதம் வரை. கர்ப்பகாலம் மொத்தம் 44 நாட்கள். பொதுவாக ஒரு கர்ப்பத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
ஆபிரிக்காவில் காணப்படும் பிக்னி அணில்களே மிகச்சிறிய அணில் வகையாகும். இவை வெறும் 5இன்ச் அளவு கொண்டவை. சுமார் 3அடி நீளம் கொண்ட மலபார் அணிலே உலகில் மிகப் பெரிய அணிலாகும். இது இந்தியாவில் உள்ளது. அணில்கள் தும்புகளை பஞ்சு போல் ஆக்கி தமது கூடுகளை அமைக்கும்.
அணில்கள் மற்றைய அணில்களிடம் இருந்து தமது உணவை பதுக்கி வைப்பதற்காக எடுத்துச் செல்லஅவற்றின் வாய்ப்பகுதிகள் இரு பை போன்ற அமைப்பு காணப்படுகிறது. இவ்வாறு பதுக்கி வைக்கும் உணவுகளை அவற்றின் தரத்துக்கு ஏற்றவாறு பிரித்து பதுக்கும். அண்ல்களின் முதுகில் காணப்படும் கோடுகள் அணிலின் உடலில் நிறமாற்றத்தை வைத்து கொசு போன்ற பூச்சியினங்களை அண்டாமல் காக்கிறது.
வீதிகளை கடக்கும் போது இறக்கும் அணில்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 1963ஆம் ஆண்டு எமோஸ் பீட்டர் என்பவர் இரு மரங்களை இணைத்து பாலமாக கட்டினார். அது போல் இன்றும் அமெரிக்காவில் இப்படி பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அணில்கள் மனிதனால் ரசிக்கப்படும் உயிரினமாகவே உள்ளது.
Comments
Post a Comment