உயிரினத் தகவல் - 06.

கறையான்(Termite).

இந்த பூமியில் மனிதர்களை விட பல மடங்கு அதிகமாக வாழும் உயிரினமாக இருப்பது கறையான்கள் ஆகும். இவை சுமார் 20கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்வதாக கூறப்படுகிறது. மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களுள் கறையானும் ஒன்று. இவை மனிதனுக்கு மட்டுமின்றி மரத்தாலான அனைத்து பொருட்களுக்கும் தீங்கு செய்யும் உயிரினமாகும்.

இவ்வாறாக  கறையான்களால் உலகில் சராசரியாக 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இவற்றுள் விவசாய பொருட்களும் உள்ளடங்கும். இதை விட கறையான்கள் தமிழுக்கு ஏற்படுத்திய பாதிப்பே மிக பெரியதாகும் ராஜராஜனால் தேடி சேமித்து வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் பாதி கறையான்களால் அழிக்கப்பட்டதாகும்.

யுராசிக் காலப்பகுதியில்ஒருவகை கரப்பான் என்ற பூச்சி வகைகளில் கறையான் பூச்சியினம் இருந்து பிரிந்து வந்ததா ஆய்வுகள் கூறுகின்றன. கறையானை தோற்று வித்த கரப்பான் பூச்சிகள் இன்று வரை வாழ்ந்து வருகின்றன. கறையானை ஆங்கிலத்தில் Termite என்று அழைக்கப்படுகின்றது. இதன் வேர் சொல் லத்தீன் மொழியில் இருக்கிறது. அதாவது லத்தீன் மொழியில் வெள்ளை எறும்புகள் என்று அழைக்கப்படுகிறது. கறையான்கள் தமிழில் யாழல், மலசம், திருஞ்சான், சிதல், சில்லான், வன்மீகம் ஆகிய பெயர்களால் அழைக்கப்படு கின்றது.

ஒரு கறையான் பூச்சிக்கூட்டத்தில் நான்கு கறாயான் வகைகள் காணப்படுகின்றன. ஆண்கறையான், ராணிக்கறையான், பணியாள் கறையான், வாகைக் கறையான் என்பனவாகும். கறையான்கள் புற்றுகளில் வாழும் ஒரு உயிரினமாகும். வாகைக்கறையான் புற்றை பாதுகாப்பது மற்றும் உணவைத் தேடும் வேலைகளைச் செய்யும் ஆனால் பண்யாள் கறாயான் உணவுகளை எடுத்து வரும் வேலையை செய்கிறது.

ராணிக்கறையானின் வேலை முட்டையிடுவது மட்டுமே ஆரம்பத்தில் 200 - 300வரையான முட்டைகளை இடும் பின் 1000 - 40,000 வரையான முட்டைகளை இடும். இவ் ராணிக் கறையான்கள் சுமார் 30 - 50 வருடங்கள் உயிர்வாழக் கூடியன. ஆண்கறையான் இனப் பெருக்கத்தை மட்டும் செய்யும். கறையான்கள் உருவாகும் போதே ராணிக் கறையானால் பணியாள் கறையான் வீரர்கறையான் என்று பிரிக்கப்படுகிறது.

வாகைக்கறையான் அல்லது வீரர் கறையான்களின் தலை மற்றும் தாடை பெரிதாக இருப்பதால் அவற்றால் உண்ண இயலாது எனவே பணியாள் கறையான்கள் உணவை சேமித்து அரைத்து வாகைக் கறையான்களுக்கு ஊட்டிவிடுகின்றன. இவ்வாறு ராணி, ராஜா மற்றும் முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கும் பணிக்கறையான்கள் ஊட்டி விடுகின்றன.

கறையான்கள் மரப்பட்டைகள், காய்ந்த இலைகள், விலங்கு கழிவுகள் மற்றும் பங்கசுக்கள் ஆகியவற்றை உண்ணக் கூடியவை. மரத்துகள்களை அரைப்பதற்கு பணியாள் கறாயானின் வாயில் செலிலோசு என்ற பதார்த்தம் சுரக்கிறது.

ராணிக்கறையான்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஆண் மற்றும் பெண் கறையான்களை உருவாக்கும் இவை இறக்கைகள் கொண்டதாக இருக்கும். இவை குறிப்பிட்ட நேரத்தில் அப் புற்றை விட்டுச் சென்று மற்றுமோர் புற்றை உருவாக்கி புதிய கறையான் கூட்டத்தை உருவாக்கும். இ்வ்வாறு மூன்று வகையான புற்றுக்களை உருவாக்கும் பூமிக்கு கீழான புற்று இது பல கிலோ மீற்றர் வரைபரந்து காணப்படும். நிலத்துக்கு மேலாக இருக்கும் புற்று இது ஆகக் கூடியது 30அடி உயரம் வரை காணப்படும் அடுத்து மரம் மற்றும் செடிகளில் கட்டப்படும் புற்று ஆகியனவாகும்.

கறையானின் புற்றில் பாம்பு மற்றும் எறும்புகளும் வாழும். கறையானை எறும்பு, பல்லி, சிலந்தி, பறவைகள், சில வகை கழுதைப்புலி ஆகியவை உண்ணும். இவற்றுள் கறையானின் மிகப் பெரிய எறும்புகளாகும். குறிப்பாக 45 வகையான கறையான் இனத்தை மனிகர்கள் உட்கொள்கின்றனர்.

இதுவரை கிடைத்துள்ள ஆய்வுகளின் முடிவுப்படி 3100 க்கும் மேற்பட்ட கறையான் வகைகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவற்றுள் 24 தொடக்கம் 30 வகைக்குட்பட்ட கறையான்களே மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவனவாக உள்ளன. குறிப்பாக கறையான்களுக்கு கண் தெரியாது அவற்றின் கொம்புகள் மற்றும் அதிர்வுகளை பயன் படுத்தியே தொடர்பாடுகின்றன. அத்தோடு உடலில் ஒரு வகை அமிலத்தை சுரந்தும் தொடர்பாடுகின்றன.

மிகச் சிறிய பூச்சியான கறையான் பல்வேறுபட்ட மனித நடவடிக்கைகளையும் செய்கின்றது. சில கறையான்கள் தமக்கான பங்கசு உணவுகளை தாமே தோட்டம் போல் உருவாக்கி உண்ணுகின்றன. அத்தோடு இரு கறையான் புற்றுகளுக்கு இடையில் ஏற்படும் உணவுப் பிச்சினையால் ஏற்படும் போரில் இறந்த கறையான்களை மற்ற கறையான்கள் தமது புற்றிலே புதைத்து கல்லறைகள் உருவாக்கக் கூடியவை. இக் கால கட்டத்தில் கறையான் புற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.