உயிரினத் தகவல் - 05.

டொல்பின்(Dolphin).🐬🐬

மனிதனுக்கு நிகரான அறிவு கொண்ட உயிரினம் டொல்பினாகும். இற்றைக்கு 50மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே டொல்பின்களின் பரிணாமம் ஆரம்பித்துள்ளது. இவை ஆரம்பத்தில் தரையில் வாழ்ந்தன பின்னர் பரிணாமம் பெற்று நீர்ப் பரப்பை அண்டி வாழ்ந்தன. 5மில்லியன் ஆண்டுகளுக்கு முன் முழுமையாக கடல் வாழ் உயிரினமாக மாறியுள்ளது. தற்போது இருக்கும் நீர்யானைகளே டொல்பின் பரிணாமத்தின் நெருங்கிய உறவாகவுள்ளது. டொல்பினை தமிழில் ஓங்கில் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Dolphin என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்கத்தில் இருந்து மருவி வந்த சொல்லாகும்.

டொல்பின் என்பது ஒரு பாலூட்டியினம் ஆகும். இவை தமது உடலின் மேற்பரப்பில் காணப்படும் துவாரத்தின் மூலமாகவே சுவாசிக்கின்றன. ஒரு நிமிடத்திற்கு 5 முறை கடலின் மேற்பரப்புக்கு வந்து டொல்பின்கள் மூச்சு விடுகின்றன. இருப்பினும் டொல்பின்களால் 15 நிமிடத்துக்கும் மேல் மூச்சை பிடித்து நீருக்குள் இருக்க முடியும்.

டொல்பின்கள் கடல் மற்றும் நதிகளில் வாழக் கூடியவையாகும். உலகம் முழுவதும் உள்ள கடல் மற்றும் நதிகளில் 40வகையான டொல்பின் இனங்கள் உள்ளன. இவற்றில் மிகச்சிறிய டொல்பின் Hector dolphin ஆகும். இதன் நீளம் 3 - 5வரையை இருக்கும். உலகில் மிக நீளமான டொல்பின் இனம் Killer whale என்ற டொல்பின் இனமாகும். டொல்பின்கள் கடல் சார்ந்த மீன், கணவாய் ஆகியவற்றஉண்ணக்கூடியது. ஒரு நாளைக்கு 15kg - 20kgவரையான மீன்களை வேட்டையாடி உண்ணும். 

டொல்பின்களை மனிதர்களால் அதிகம் பார்க்க கூடிய வாய்ப்பு அவை கடலுக்கு மேலே குதித்து விளையாடும் போது தான்கிடைக்கும். இவ்வாறு டொல்பினால் சுமார் 20அடி உயரம் வரை கடல் நீருக்கு மேலால் குதிக்க முடியும். டொல்பின்கள் மிகவும் விளையாட்டு குணம் உள்ள ஓர் உயிரினமாகும். டொல்பின்கள் இயற்கையாகவே தன் இனத்தை சேர்ந்தவையுடனோ மனிதர்களுடனோ அல்லது வேறு உயிருனங்களுடனோ விளையாடக் கூடியவை. 

டொல்பின்கள் குழுவாக வாழக்கூடிய ஓர் உயிரினமாகும். ஆண் டொல்பின்கள் மட்டும் குழுவாக இருந்தால் Bulls என்றும் பொண்கள் மட்டும் குழுவாக இருந்தால் Cows என்றும் சிறு குட்டிகள் மட்டும் ஒன்றாக இருந்தால் calves என்றும் அழைக்கின்றனர். டொல்பின்கள் பாசம் மற்றும் உதவும் மனப்பாங்கு கொண்ட உயிரினமாகும். ஆபத்தில் உள்ள மனிதர்களுக்கு உதவக்கூடியதாகும்.

டொல்பின்களுக்கு காணப்படும் பற்கள் உணவை பிடிபேபதற்காக மட்டுமே. இவற்றுக்கு வயிறு இரு பகுதியாக உள்ளது. ஒன்று உணவு சேமிக்கவும் மற்றையது உணவு செரிமானத்துக்காகும்.டொல்பின்கள் பாலூட்டிகளாகும் எனவே குட்டி ஈனக்கூடியவை. 11 - 17 மாதங்கள் இதன் கர்ப்ப காலமாகும். இவை குட்டிகளை சாதாரணமாக 3 ஆண்டுகள் வரை தம்முடனே வைத்திருக்கும். 

டொல்பின்கள் தமக்குள்ளேயே தொடர்பாடலை மேற்கொள்கின்றன. ஒரு நாளைக்கு 100km வரை  டொல்பினால் நீந்த முடியும். டொல்பின்களின் மிகப் பெரிய எதிரி சுறாக்களாகும். குறிப்பாக ஜப்பான், பெரூ ஆகிய நாட்டு மக்கள் டொல்பினை விரும்பி உண்கின்றனர். 

டொல்பின்கள் ஒலியை பயன்படுத்தியே தமக்குள் தொடர்பாடலை மேற் கொள்கின்றன. இனேறைய காலத்தில் கடல் போக்குவரத்தினால் ஏற்படும் ஒலி மாசு காரணமாக டொஸ்பின்களின் வாழ்க்கை பாதிப்படைவதுடன் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதாலும் டொல்பின்கள் உயிரிழக்கின்றன. இவ் உயிரிகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.