உயிரினத்தகவல் - 04.
கழுகு(Eagle). பறவையினங்களின் அரசன் என்று அழைக்கப்படும் உயிருனம் கழுகுகளாகும். உலகத்தில் மொத்தமாக 60 - 70 வகையான கழுகினங்கள் உள்ளன. கழுகுகள் அதிகளவில் ஆபிரிக்க பிரதேசங்களில் வாழ்கின்றன. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசியப்பறவையாக கழுகு உள்ளது. வெண்டலைக் கழுகு, பொன்னங்கழுகு, கடல் கழுகு, பருந்து, வல்லூறு, பிணந்தின்னி கழுகு அல்லது கருங்கழுகு, பாறு, பனவை, எழால், கங்கு, கூளி, பூகம், கங்கம் என பல்வேறுவகையான கழுகுகள் உள்ளன. சுமார் 70ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய உயிரினம் கழுகுகளாகும். கழுகுகள் சாதாரணமாக நிலப்பரப்பில் இருந்து 10,000 அடி உயரம் வரை பறக்கக் கூடுயவை. அவற்றுள் சில கழுகுகள் 15,000அடி வரை கூட பறக்கக் கூடும். சில கழுகுகள் 3அடி உயரமும் 7அடி நீளமும் கொண்ட பெரிய பறவையினமாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு கழுகும் ஒவ்வொரு அளவில் இருக்கும். கழுகள் உண்ணும் உணவை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாம்பு உண்ணும் கழுகு, மீன் உண்ணும் கழுகு. கழுகு தனது இறக்கை, கூரிய நகங்கள் , அலகு மற்றும் கண்களின் துணையுடனே தமது வேட்டை பயணத்தை தொடங்குகின்றன. கழுகுகளின் கண்கள் மனித கண்களை விட 4 - 8 மடங்...