ஆரோக்கிய வாழ்க்கை.

வல்லாரை(Indian pannywort).

வல்லாரை என்றதுமே அனைவரது மனதிலும் தோன்றுவது ஞாபக சக்தி என்பதே ஆகும்.வல்லாரை கீரை இனங்களில் ஒன்றாகும். உண்மை தான் வல்லாரைக் கீரை மனிதனின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததாகும். "வல்லாரைக் கற்ப முண்ண      வல்லாரை  யார் நிகர்வர்" என்பது தேரையர் கூற்றாகும். வல்லாரையின் தாவரவியற் பெயர் centella asiatica linn ஆகும். வல்லாரை நினைவாற்றலை தூண்டவல்லது ஆகையால் இதற்கு "யோசனவல்லி" என்

ற பெயர் உள்ளது. ஆயுர்வேத மருத்துவம் வல்லாரை"மேதியரசாயன" என்று அழைக்கப்படுகின்றது. மனித நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்வு ஊட்டுவதாலே இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 

வல்லாரையில் இரும்புச்சத்து, விற்றமின் A,C ஆகிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வல்லாரை இடம்பிடித்துள்ளது. வல்லாரையில் பெரிய இலை வல்லாரை, சிறிய இலை வல்லாரை என இருவகை உள்ளன. வல்லாரையின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளே உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது ஒரு கொடிவகையாகும். இது நிலத்தில் படர்ந்து வளரக்கூடியது. படரும் தண்டின் கணுக்களில் இருந்து வேர்கள் முளைக்கின்றன. வல்லாரை சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய கொடிவகையாகும். வல்லாரையில் வெளிர்ஊதா மற்றும் வெண்ணிறப்பூக்கள் பூக்கும்.

வல்லாரை ஒரு மனிதனுக்கு மிகப் பெருமளவில் சத்தாக பயன்படுகின்றன. வல்லாரையின் பயன்கள் பற்றி பார்க்கலாம். வல்லாரை முக்கியமாக மூளையின் செயற்பாட்டினை மேம்படுத்த உதவுகின்றது. தினமும் வல்லாரை உட்கொள்வதனால் புத்தி கூர்மைாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். சிறுவயது முதல் வல்லாரை உட்கொள்வது சிறந்ததாகும். தினமும் 300-400mg அளவிலான வல்லாரை உட்கொள்வதனால் நினைவாற்றல் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வல்லாரை வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலிப்படங்கியாகவும் உள்ளது. பாரம்பரிய மருத்துவம் வல்லாரைக் கீரையை மனஅழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள இரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோய் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றது வல்லராக் கீரை. 

வல்லாரை கீரையில் எண்ணெய், மாத்திரை ஆகிய உற்பத்தி செய்யப்படுகின்றன. வல்லாரை எண்ணையை தலையில் பூசுவதால் கூந்தல் மற்றும் தலைச் சருமம் வறண்டு போகாமல் இருக்கின்றது. அத்தோடு கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கின்றது. பொடுகு தொல்லையை நீக்குகின்றது.

வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து டீ போட்டு அருந்துவதனால் உடலுக்கு நன்மைகள் ஏற்படுகின்றது. மன அழுத்தம்  குறைவடைகின்றது. தற்காலங்களில் வல்லாரையை பொடி செய்து மாத்திரைகளைகவும் அருந்துகின்றனர். உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க கூடியது.

வல்லாரைக் கீரையை சுலபமாகவும் சுவையாகவும் சத்தாகவும் உட்கொள்ள கூடிய சமையல் முறையை பார்க்கலாம். வல்லாரை அரையல் செய்வது பற்றிய குறிப்பை பார்க்கலாம்.                                              தேங்காய்ப்பூ - 1சிறங்கை                                        வல்லாரைக் கீரை - 2கைப்பிடி                              செத்தல் மிளகாய் - 5                                          உப்பு - தேவையான அளவு                                      நெய்/நல்லெண்னை - 1தேக்கரண்டி                  தேசிப்புளி - தேவையான அளவு  

நல்லெண்னையை சட்டியில் விட்டு சூடேற்றிய பின் செத்தல் மிளகாய்களை போட்டும் வாசணை வர வதக்க வேண்டும் பின்னர் வல்லாரை கீரையை சிறிதாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும். சிறிது வதங்கியதும் தேங்காய்ப்பூ மற்றும் உப்பு சிறிதளவு இட்டு கிளறவும் பின் தேசிப்புளி சேர்த்து உண்ணலாம் இது உடலுக்கு மிக ஆரோக்கியமானதாகும். தினமும் வல்லாரையை உட்கொள்வதனால் நோய்கள் அற்றவாழ்க்கையை வாழலாம்.

Comments

Popular posts from this blog

Back In My Day

உலகத் தகவல்.

உயிரினத் தகவல் - 06.