உயிரினத் தகவல் 01

தேனீக்கள்(Bees).

தேனீக்கள் பல்வேறு வகையான அதிசயங்களைக் கொண்ட ஒரு பூச்சி இனமாகும். உலகில் உள்ள சுவாரஸ்யமான உயிரினங்களுள் தேனீக்களும் ஒன்றாகும். தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து அழிந்து விட்டால் மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று " ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்" கூறுகிறர். இதனடிப்படையில் தேனீக்கள் இச் சூழலுக்கு மிக முக்கியம்ன உயிரினமாக இருப்பது தெரியவருகிறது.

தேனீகளுக்கு மிக கூர்மையான ஞாபகசக்தி இருக்கின்றது. மனிதனுக்கும் தேனீக்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. உலகில் 80% உணவுப் பெருக்கத்திற்கு தேனீக்களே காரணமாக அமைகின்றன. பூக்களில் இருந்து மதுரத்தை உறிஞ்சி தனது தனது உடலில் இருக்கும் தேன்பையில் சேமிக்கின்றது. இந்த மதுரம் செரிக்காமல் தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதியங்களுடன் சேர்ந்து திரவமாக மாறும். கூடு திரும்பியதும் கூட்டு வாசலில் காத்திருக்கும் தேனீயின் வாய்க்குள் தான் சேகரித்து வைத்த மதுரத்தை கொட்டும். இவ்வாறு 50 முறை கக்கினால் தான் ஒரு துளி தேன் சேரும். இவ்வாறு இனிய தேனை சேகரிப்பது தான் இந்த தேனீக்களுடைய வேலையாகும். சுமார் இருபதாயிரம்  வகையான தேனீக்கள் இந் உலகத்தில் இருக்கின்றன. அவற்றில் 5%மான தேனீக்கள் மட்டுமே தேனை உருவாக்கும் வேலையை செய்கின்றன. 

தேனீக்கள் தேன் சேகரித்து தேனைப் பதப்படுத்துவது தான் உலகின் சிறந்த உணவுப்பதப்படுத்தும் தொழிநுட்பமாக கருதப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு வகையான தேனீக்களால் உருவாக்கப்படும் தேனும் ஒவ்வெறு வகையான சுவைகளில் இருக்கும். இத் தேனும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. மலைத்தேன், கொம்புத்தேன், பொந்துத்தேன் போன்ற வகைகளைக் குறிப்பிடலாம்.

தேனீக்கள் தான் உலகில் மிக கடுமையான உழைப்பாளிகளாகும். இப்படி கூறப்படக்காரணம் ஒரு வருடத்திற்கு ஒரு தேன் கூட்டில் இருந்து சுமார் 50கிலோ தேனை எடுக்க முடியும். அதில் இருக்கும் அரை கிலோ தேனை உருவாக்க 10,000க்கும் மேற்பட்டத் தேனீக்கள் 1,21,000kms தூரம் பயணித்து 70,00,000 பூக்களில் இருந்து மதுரத்தை உறிஞ்சியே இந்த அரைக் கிலோ தேனை உருவாக்குகின்றது. இத்தேனை உருவாக்க தேனீக்கள் பயணிக்கும் தூரத்தை அளவிட்டால் பூமியை பத்து முறை சுற்றி வரும் தூரமாகும். இதனால் தான் இவை கடுமையான உழைப்பளிகள் என்று அழைக்கப்படுகிறது.


ஒரு தேன் கூட்டில் மூன்று வகையானத் தேனீக்கள் காணப்படுகின்றன. ராணித் தேனீ, ராஜாத் தேனீ, வேலைக்காரத் தேனீ ஆகும். இதில் ராணித் தேனீயின் வேலை முட்டையிடுவது மட்டும்தான் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் முட்டைகள் வரை இடும். இதன் ஆயுட்காலம் 2- 5வருடங்களாகும். இதன் அடிப்படையில் தனது ஆயுட்காலத்தில் சுமார் ஒரு மில்லியனில் இருந்து ஒண்டரை மில்லியன் முட்டைகளை இடும். அடுத்தது ராஜாத் தேனீ ராணியுடன் புணர்வது மட்டும் தான் வேலை. இது முடிந்ததும் ராஜாத் தேனீ இறந்து விடும். வேலைக்காரத் தேனீகளே தேன்கூட்டின் முதுகெலும்பாகும். இவை தேனை சேமித்து வைத்தல், தேன்கூட்டை பாதுகாத்தல், ராணி இட்ட முட்டைகளைப் பாதுகாத்தல் மற்றும் அம் முட்டைகளில் இருந்து வெளிவரும் புளுக்களை வளர்த்தெடுத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. இவ் வேலைக்காரத் தேனீக்களின் ஆயுட்காலம் வெறும் 5வாரங்கள் மட்டுமே ஆகும். அதுவே குளிர்காலம் என்றால் இவற்றின் ஆயுட்காலம் சிறிது நீடிக்கும். இதற்கு காரணம் குளிர்காலங்களில் பூக்கள் பூப்பது குறைவு ஆகையால் பூக்களில் இருந்து மதுரத்தை சேகரிக்கும் வேலை குறைவாகக் காணப்படுவதே ஆகும். இருப்பினும் இவ் வேலைக்காரத் தேனீக்கள் அந்த 5 வாரங்களில் தமது ஒவ்வொரு பணிகளையும் செய்து தமது கடமைகளை நிறைவு செய்கின்றன. தேனீக்கள் இவ்வாறு கடுமையாக உழைத்து தேனை சேமிக்க காரணம் குளிர் காலங்களில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டை தீர்க்கவாகும்.

தேனீக்கள் சூரியனின் மூலமாகவே திசையை அறிகின்றன. அத்துடன் காந்த சக்தியை அறிந்து நான்கு திசைகளையும் துல்லியமாக அறியும் ஆற்றல் உண்டு. அத்தோடு தேனீக்களுக்கு சாதாரணமாக இரு கண்களும் தலைக்குக மேலே மூன்று கண்களும் மொத்தமாக 5கண்களும் உள்ளன. இவற்றை வைத்து தேனீயால்  300பாகை வரை பார்க்க முடியும். 

தேனீக்களில் கூட்டைப் பார்த்தால் அது அறுங்கோண வடிவில் இருக்கும். இவ்வாறு அமைக்க காரணம் தேனீகளின் முட்டையை பாதுகாப்பதற்கும் தேனை சேமிக்க இலகுவான முறை என்பதற்குமாகும். அறுகோண வடிவில் கூட்டை அமைக்கும் போதே சிறிதும் இடம் வீணாகாமல் இருக்கும் என்பதும் ஒரு காரணமாகும். தேனீக்கள் தமது வாயில் சுரக்கும் ஒரு பதார்த்தத்தின் மூலமாகவே தமது கூட்டை அமைக்கின்றன.

தேனீக்கள் பூக்களில் இருந்து தேனை எடுப்பதன் ஊடாக பூக்களின் மகரந்த சேர்க்கு பெரிதும் உதவி செய்கின்றன. குறிப்பாக உலகில் இருக்கும் மரங்களும் செடிகளும் மலர்ந்து அடுத்த தலைநுறையை அடைய தேனீக்களின் பங்கே காரணமாக உள்ளது. தேனீக்களுக்கு கொடுக்கு காணப்படும் அதிலும் ஒரு சில வகைகளுக்கு மட்டுமே கொடுக்குகள் இருக்கும். தேனீக்கள் கொட்டும் போது அதன் கொடுக்கும் சேர்ந்தே மாட்டிக் கொள்ளும் இதனால் கொடுக்கை பிய்த்து எடுக்கும் போது தேனீக்கள் இறந்து விடுகின்றன. 200க்கு மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால் உயிருக்கு அபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. தேனீக்களின் கொடுக்கில் காணப்படும் வேதிப்பொருளில் எயிட்ஸ் நோய்க்கான மருந்து இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேனீக்களின் வாழ்கை மிகவும் சவாலானதாகவே அமைகின்றது. ஒரு தேனீ பிறந்து வளர்ந்து தேனைத் தேடி செல்லும் போது பல்வேறு தடைகளை கடக்கின்றது. பறவைகளிடம் இருந்து தப்பி தனது கூட்டை சென்றடைவதே ஒரு பெரிய தடையாக இருக்கின்றது. தேனீக்கள் தமது கூட்டத்திடையே தெடர்பை நடனம் ஆடி மேற்கொள்கின்றன. இந்நடனம் வட்ட நடனம், வாலாட்டு நடனம் என்று அழைக்கப்படும். பூக்கள் இருக்கும் திசையை குறிக்கவும் அதிக உணவு இருக்கும் இடத்தை காட்டவும் நடனமாடுகின்றன. 

இவ்வாறு மனிதனுக்கு நன்மைகளை செய்யும் தேனீக்கள் தற்காலத்தில் அழிந்து வரும் அபாயத்தை எதிர்தொள்கின்றன. இதற்கு காரணம் தற்போது பயன்படுகத்தப்பட்டு வரும் இரசாயன கிருமிநாசினிகளாகும். செயற்கை உரம் காரணமாக தேனீக்களின் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து தேனீக்கள் இறக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. தேனீக்கள் இல்லை என்றால் உலகம் விரைவில் அழிந்து விடும் என்பது உண்மையே ஆகும்.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.