ஆரோக்கிய வாழ்க்கை.

கோவை(கொவ்வை)காயின் மருத்துவ குணங்கள்.

இன்றும் சரி அன்றைய காலங்களிலும் சரி கவிஞர்களைல் உதட்டிற்கு உவமையாக கோவை பழங்களே அதிகம் உவமையாக கூறப்படுகின்றது. கோவை ஒரு கொடிவகைத்தாவரமாகும். கோவைக்கொடியில் காய், பழம், இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துப்பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டதாகும். கோவைப்பூக்கள் வெண்ணிறமானவை. பழங்கள் சிவப்பு நிறமானது. இக்கொடியில் இருந்து பூமிக்குள் கிழங்கு உருவாகும். கோவையின் தாவரவியல் பெயர் coccinia grandis ஆகும். கோவைக்காயில் மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை ஆகிய வகைகளைக் கொண்டது. 

கோவைக்காய் பல்வேறு மருத்துவக்குணங்களைக்கொண்டதாகும். இதில் நார்ச்சத்து, விற்றமீன்கள், காபோஹைதரட்டு, இரும்புச்சத்து , கல்சியம் ஆகிய வேதிப் பொருட்கள் உள்ளன. இதன் காய் பச்சை நிறமாகவை பித்தம், ரத்தப் பெருக்கு ஆகியவற்றுக்கு சிறந்ததாகும். இக் காய் நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் சேரும் சக்கரையை கட்டுப்படுத்தக்கூடியதாகும். வாய்ப்புண்க்கு கோவைக்காய் சிறந்த மருந்தாகும். பச்சையாகவே வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும். கோவைக்காய் உடல் வெப்பநிலையையும் குறைக்கும். கோவைக்காயை அரைத்து திரவாமாக குடிப்பதால் தொப்பை குறையும். இக் காய் பெருகுடலில் இருக்கும் தேவையற்ற உணவுக்களிவுகளை வெளியேற்றுகின்றது. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் வாரம் மூன்று நாட்கள் கோவைகயை உணவுடன் உள்ளெடுத்தால் நாட்போக்கில் இயற்கையாகவே சிறுநீரககல்லை கரைத்துவிடும். சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சிறுநீரக உறுப்பின் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது. இதே போல் கல்லீரல் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது. மலச்சிக்கல் பிரச்சினைக்கும் சிறந்த தீர்வைக் கொடுக்கும் கோவைக்காய்கள். கோவைக்காய்கள் கசப்பானவை எனவே பச்சையாக உண்ண இயலாது.


கோவைப்பழத்திலும் பல்வேறுப்பட்ட நோய்களுக்கு மருந்தாக உள்ளது. கோவைப்பழங்கள் பித்தம், காமாலை, இரத்தசோகை, வாய்வு பிரச்சினைகள், வாந்தி போன்ற வருத்தங்களை குணமாக்கக்கூடியது. கோவைப்பழங்களை உட்கொள்ளும் போது புளிப்பு மற்றும் இனிப்பாக காணப்படும். இது வாய்புண்ணுக்கு சிறந்ததாகும். கோவைப்பழங்களை யூஸ் செய்து குடிப்பதால் வயிற்றுப்புண் குறைவடையும். கோவைப்பழங்களை அப்படியே உண்பதால் மலச்சிக்கல் பிரச்சினை தீர்கின்றது. 

கோவைஇலைகளிலும் தண்டுகளிலும் பல வகையிலான மருத்துவ குணங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கோவை இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றக்கூடியதாகும். கோவைப்பழத்தின் இலைகள் , தண்டுகள் தோல் நோய்களைக்குணப்படுத்தக் கூடியதாகும். கடிக்காயங்களில் கோவைப்பழ இலையை அரைத்துபே பூசினால் காயங்கள் மாறும். கோவை இலைகள் தினமும் குறிப்பிட்ட அளவில் உட்கொள்வதால் இரத்தம் சுத்தமடைவதுடன் இரத்தம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதும் குறைவடைகின்றது. கோவை இலைகள் கசப்பானவை ஆகையால் பச்சையாக உண்ண முடியாது. ஆகையால் வறை செய்து உண்ணலாம்.

இவ்வளவு நற்குணங்களை உடலுக்கு வழங்கும் கோவைப்பழம் , கோவைக்காய், கோவை இலை மற்றும் தண்டு ஆகியவற்றை யூஸ், வறுவல், பொரியல், குழம்பு, கிரேவி , சுண்டல்,  கூட்டு , சம்பல் செய்தும்உட்கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.