ஆரோக்கிய வாழ்க்கை.

சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள்.

தினமும் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அதிகளவு கவனம் செலுத்தவதில்லை. இதனால் காலப்போக்கில் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றது. எனவே ஒவ்வெரு உணவு பொருட்களிலும் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்கொள்வோம்.

பொதுவாக சூரியகாந்தி இரு தேவைகளுக்காக பயிரிடப்படுகின்றது. சூரியகாந்தி எண்ணையை பெறுவதற்கும் மற்றும் சூரியகாந்தி விதைக்காகவும். சூரியகாந்தி முதல் முதலில் மெக்சிக்கோவிலே பயிரடப்பட்டது. சூரியகாந்தி மலரில் இருந்து பெறப்படும் சூரியகாந்திவிதையினால் எமது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. தினமும் ஒருகைப்பிடி அளவு சூரியகாந்தி விதை சாப்பிடுவதனால் பல வகைப்பட்ட நன்மைகள் ஏற்படும். ஞாபகசக்தி அதிகரிப்பதற்கு சிறந்ததாகும். சமிபாட்டு பிரச்சினைகளிக்கும் சிறந்ததாகும்.

சூரியகாந்தி விதையில் விற்றமீன் E, நார்ச்சத்து, துத்தநாகம், கொழுப்பு 14g, புரதம் 5.5g, இரும்பு, மக்னீசியம், செலினியம் மற்றும் காபோஹைதரட்டு ஆகிய ஊட்டச்சதுதுக்கள் காணப்படுகின்றது. சூரியகாந்திவிதையில் உள்ள துத்தநாகம் நோய்சக்தி அதிகரிப்பதற்கு உதவுகின்றது. சூரியகாந்திவிதையில் உள்ள நார்ச்சத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை குறைக்கின்றது. 

சூரியகாந்தி விதை இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கின்றது. சூரியகாந்தி விதை உள்ள செலினியம் மற்றும் விற்றமீன் ஆகியவற்றால் தொற்று நோய் குறைவடைவதுடன் நோய் எதிர்ப்புசக்தியும் அதிகரிக்கின்றது. சூரியகாந்திவிதையில் உள்ள வேதிப்பொருட்கள் மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் உயிரணுக்களை அழிக்கின்றது. 

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் கூட குறைக்கின்றது. இளமையான தேற்றத்தை கூட பாதுகாக்க உதவும் இந்த சூரியகாந்தி விதைகள். அழற்சி எதிர்ப்பு பதார்த்தங்களும் காணப்படுகிறது இவ் விதையில். உயர் குருதி அமுக்கத்திற்கும் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. சூரிய காந்திவிதையில் காணப்படும் கல்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. 

சூரியகாந்தி விதைகளை அளவாக உட்கொள்வதால் அதிக உடல் எடையை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கின்றது.  எமது உடலில் இருக்கும் ஹோமோன்களின் சமநிலைக்தும் பங்களிப்பு செய்கின்றது. சூரியகாந்தி விதைகளை உப்பு சேர்க்காமல் வருத்து ஒரு நாளைக்கு 30g மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர் அதிகளவு நீர் அருந்த வேண்டும். குறிப்பாக பெண்கள் குறிப்பிட்ட அளவில் சூரியகாந்தி விதைகள் உட்கொள்வதால் உடலில் உற்பத்தியாகும் ஈஸ்டஜன் மற்றும் புரஸ்ரெஜன் ஆகியவற்றில் சமநிலையை பேணுகிறது. இதனால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கின்றது. இவ்வாறு உடலுக்கு நன்மைகளைத்தரக்கூடிய சூரியகாந்தி விதையினை குறிப்பிட்ட அளவில் மட்டும் உட்கொள்ள வேண்டும்.




Comments

  1. superb 👍, romba nalla visayangala ezhuthureenga panreenga.thodarnthu ezhuthunga 🤝

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.