நாவல்.

வீரயுக நாயகன் வேள்பாரி.

பல்வகைப்பட்ட நவீன தொழிநுட்ப வசதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் எமது மனது சிற் சில சமயங்களில் அவை அனைத்தையும் விட்டு வெளிவந்து சற்று இளைப்பாற நினைத்து புத்தகங்களைத் தேடுகின்றது. இவ்வாறு நான் புத்தக வாசிப்பில் மூழ்கிப்போகையில் தான் எனது நண்பர் ஒருவர் மூலமாக யதார்த்தமாக கிடைத்ததே "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற ஒரு மாவீரனைப் பற்றிய நாவல். இது மாவீரனின் கதை மட்டுமல்ல தமிழனின் பழமை பற்றிய வரலாறும் கூட. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி ஆனந்த விகடனில் வெளிவரும் இந் நாவல் நூறு அத்தியாயங்களைக் கடந்ததாகும்.

வேள்பாரி ஒரு குறுநில மன்னன் என்றாலும் அவன் மன்னனாக வாழவில்லை மக்களோடு மக்களாக ஒன்றினைந்தே வாழ்ந்தான். 

"பாரி பாரி என்று பல ஏந்தி

 ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

 பாரி ஒருவனும் அல்லன் 

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே"

என்ற பாடலடியானது பாரிக்கு நிகர் இந்த பாரில் யாரும் இல்லை இந்த உலகில் பாரிக்கு நிகரானவன் மாரியே என்று கூறுகின்றது. தமிழனின் முதல் மகாகவி கபிலரை ஒரு முக்கிய பாத்திரமாக கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார் நாவலாசிரியர். 

பாரியின் மனைவி ஆதினி பாரிக்கு அங்கவை, சங்கவை என இரு மகள்கள் பறம்பு என்ற சிறு மலைப்பிரதேசத்தை ஆட்சி செய்கின்றான். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது போலவே பாரி மிகப் பெரிய கொடையாளி என்பது உப்பு விற்க வரும் உமணர்கள் மூலமாக மூவேந்தர்களிற்கு தெரிய வருகிறது. பாரியின் கொடை தன்மை நாளா புறமும் பறவுவதைக் கண்டு மூவேந்தர்களும் வெதும்பினர். மூவேந்தர்களும் சினம் கொண்டு பாரி மீதும் பறம்பு மலை மீதும் தனித்தனியே போர்கள் மேற்கொண்டனர். இப் போர்களில் பாரி அவர்களை வெற்றி கொண்டான். பின் மூவேந்தர்களும்ம ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி மிகப் பெரும் படையுடன் போர் புரிந்தனர். இருப்பினும் அப் போரை பாரி தனது சிறுபடையைக் கொண்டு தோற்கடித்து திருப்பி அனுப்பினான். இவ்வாறு தோல்வி கண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வஞ்சினம் கொண்டு சதி திட்டங்களை வகுத்து  பாரியின் உயிரை பறித்தனர். சூழ்ச்சியின் மூலம் பறம்பினையும் கைப்பற்றினர். பாரியை மூவேந்தர்களாலும் சதி மூலமே வெற்றிகொள்ள முடிந்தது. வீரத்தின் மூலமாக வெற்றி கொள்ள முடியவில்லை. 

சு. வெங்கடேசு அவர்கள் மாக கவி கபிலரையே ஓர் மையப்பாத்திரமாக கொண்டு கதை நகர்த்தியுள்ளார். மகா கவி கபிலர் பாரிக்கு நெருங்கிய நண்பர் இறுதியாக பாரி உயிர் விடும் தருணத்தில் கூட பாரி தன் மகளிர் ஆகிய அங்கவை, சங்கவை ஆகியோரை கபிலரிடமே ஒப்படைத்து சென்றார். இந் நாவலில் அழிந்து போன தமிழனின் ஆதிக்குடிகளையும் பறவைகள், விலங்குகள், மரஞ்செடி கொடிகள், வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் ஆகியவற்றையும் மிக அழகாக நூதனமாக கூறியுள்ளார். 

நாவல் ஆரம்பத்தில் கபிலர் பாரியை காண பறம்பு நோக்கி செல்கிறார். கபிலருடன் நானும் பாரியை காண பறம்பு நோக்கி சென்ற பறம்பில் வாழ்ந்து வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது சு. வெங்கடேசு எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற நாவலை படிக்கையில். ஆனந்த விகடனில் சு. வெங்கடேசு என்ற எழுத்தாளரால் தொடர் நாவலாக  வெளியிடப்பட்ட வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலினை புத்தகமாக  தொகுத்த லிங்கினை கீழே பதிவிட்டுள்ளேன். நீங்களும் இந்த லிங்கின் மூலம் கபிலருடன் பறம்பு நோக்கி செல்லாம்.

வீரயுக நாயகன் வேள்பாரி நாவல்

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.