சுவை தரும் கனி - 02
அன்னாசி(Pineapple).
அன்னாசியில் விற்றமின் Cகாணப்படுவதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு உதவி செய்கிறது. இவ் விற்றமின் Cயின் முக்கிய வேலை உடலில் கொலஜனை உற்பத்தி செய்வதாகும். இதனால் உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குறைவடைகின்றன. வீக்கங்கள் குறைய உதவுகின்றது. குறிப்பாக மூட்டு வீக்கங்கள் உடையவர்கள் வலி, வீக்கம் குறைய இதனை எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசியை உட்கொள்வதனால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். அன்னாசி பழம் சாப்பிடுவதால் சளி, இருமல் குணமாகும். அன்னாசி பழத்தினில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், பீட்டா கரோட்டின் ஆகிய இருப்பதால் புற்று நோய் எதிர்ப்பு பழமாக பரிந்துரைக்கப்படுகின்றது.
அன்னாசியில் டீ தயாரித்து குடிக்கலாம். இது உடல் எடை குறைக்க உதவும் . ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். சிறிது டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் அன்னாசி பழம், எலுமிச்சம்பழம் ஜூஸ் இரண்டையும் சேர்த்து குளிரூட்டியில் வைத்து விட்டால் போதும். அவ்வப்போது இதை குடித்துவரும்போது, எடை இழப்பு வேகமாக ஏற்படும்.
இத்தனை நன்மைகள் கொண்ட இந்தப் பழத்தில் சில தீமைகளும் உள்ளன. இரத்தத்தில் சக்கரையை அதிகரிக்கும். இயற்கை சர்க்கரையை இது கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. இப் பழத்தில் காணப்படும் பிரோமிலெய்ன் என்சைம் என்ற வேதிப் பொருள் மாதவிடாய் போக்கினை ஊக்கப்படுத்தும் என்பதால் கர்ப்ப காலத்தில் இப்பழத்தினை தவிர்த்து விடுவது நல்லது. அன்னாசிப் பழத்தை அதிகளவில்ல உட்கொள்ள கூடாது. தினமும் சிறு தூண்டு மாத்திரம்ரம உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
Comments
Post a Comment