சுவை தரும் கனி - 01

கொய்யா(Guava).
பொதுவாக அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழங்களுள் கொய்யாப் பழமும் ஒன்றாகும். கொய்யாப் பழங்களின் தாயகம் பேரூ நாடகும். கி.மு 400 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே பேரூ நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்கள் கொய்யாப் பழத்தை சாப்பிட்டதாக தகவல் குறிப்பிடுகின்றன. கி.மு 800 காலப்பகுதியில் பிறேசில் நாட்டு மக்கள் கொய்யாப்பழத்தை உட்கொண்டதாக தகவல் கூறுகின்றன. இவர்கள் கொய்யா மரத்தின் பல பாகங்களை பயன்படுத்தி உள்ளதாகவும் அக்காலங்களில் இறைச்சியை வாட்ட கொய்யா மரக்கட்டைகளை பயன்படுத்தியுள்ளதாக தரவு கூறுகிறது. இதற்கு காரணம் கொய்யா மரங்களை எரித்து இரைச்சி வாட்டினால் இறைச்சி சுவையாக இருக்குமாம். இத்தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் கொய்யாக்கனி தென் அமெரிக்காவில் இருந்தே உலகு எங்கும் பரவி இருப்பது தெரிய வருகிறது. 
 
தென் அமெரிக்காவில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு கொய்யா பரவ முக்கிய காரணம் பறவைகள் ஆகும். பறவைகள் இக் கனியை உண்டு வேறு இடங்களுக்கு சென்று இடும் எச்சம் மூலமாகவே இவை பரவியுள்ளன. கொய்யா என்ற சொல்லானது ஆங்கிலத்தில் Guava என்றழைக்கப்படும் இதன் வேர்ச்சொல்  தென் அமொரிக்காவில் வாழ்ந்த பழங்குடி மக்களால் பேசப்படும் Tino என்ற மொழியில் இருந்து வந்ததாகும். அவர்கள் கொய்யாவை Guayabo என்று அழைத்தனர். இதை ஸ்பெயினிஸ் Guayaba என்றழைக்கப்பட்டு பின் அது Guava என ஆகியது. உலகிலே அதிகளவு கொய்யா உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதாவது மொத்த உற்பத்தியில் சுமார் 45% கொய்யா கனிகளை இந்தியா உற்பத்தி செய்வதாக தரவுகள் கூறுகின்றன. இது ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழமாகும். கொய்யாவின் இலை, காய், பழம் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
கொய்யா கனிகள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்திலும் சிவப்பு அல்லது இளஞ் சிவப்பு நிறத்திலும் உள்ளன. கொய்யாப் பழத்தில் பல்வேறுப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, விற்றமின் A,B,C, கல்சியம், இரும்பு, பொஸ்பரசு,மக்னீசியம் ஆகியன காணப்படுகின்றன. இவை மனித உடலுக்கு பல்வேறுபட்ட சத்துக்களை தருகின்றது. கொய்யாவினால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம். 

கொய்யாவில் காணப்படும் விற்றமின் C சத்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. இது கண் பார்வைக்கும் நன்மை தரக்கூடியதாகும். புற்றுநோய்க்கு கொய்யா பழம் சிறந்த மருந்து என்று ஆய்வுகள் கூறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொய்யாவில் உள்ள  லைக்கோபினே, க்வர்செடின் ஆகிய வேதிப் பொருட்கள் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. கொய்யா பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததாகும்.

கொய்யாவில் நார்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கின்றது. அத்தோடு இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. கொய்யாப் பழங்களை அவ்வப்போது உட்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறைவடைந்து உடல் எடை குறையும். சளி மற்றும் இருமல் ஆகியவற்றுக்கு கொய்யா சிறந்ததாகும். 

சிறியவர்கள், பெரியவர்கள், முதியோர் மற்றும் கர்ப்பிணித்தாய்மார் ஆகியோர் கொய்யாவை தவறாது உட்கொள்வதால் உடலுக்கு நன்மை ஏற்படுகின்றது. கர்ப்பிணி பெண்கள் உண்பதால் வயிற்றில் உள்ள குழந்தையின் நரம்பு மண்டலம் வலுப்படுவதாக  கூறப்படுகின்றது. கொய்யாவில் உள்ள லைக்கோபின் என்ற வேதிபேபொருள் தோலை பாதுகாக்கின்றது. மனித உடலில் ஏற்படும் மலட்டுத்தன்மையை நீக்குகின்றது இவை.  
உணவுக்கு பின் கொய்யா உட்கொள்வதால் மூல நோய் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட முடியும். கல்லீரல் பலப்படும். கொய்யாவில் காணப்படும் இரும்புச்சத்து இரத்தசோகை நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. கொய்யா பழங்கள் பற்களுக்கும் சிறந்த சத்தாக உள்ளது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொய்யா சிறந்ததாகும்.

கொய்யாவை மாலை மற்றும் இரவு வேளைகளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லதாகும். இக் கொய்யா கனியின் மூலம் மருந்துகள், இனிப்பக்கள், ஜாம் , சட்னி, பழச்சாறு ஆகியன தயாரிக்கப்படுகின்றன. தினமும் மதிய உணவுக்கு பின் சிறிய துண்டு கொய்யா பழம் உட்கொள்வது உடடலுக்கு மிக நல்லதாகும்.






Comments

Post a Comment

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.