ஆரோக்கிய வாழ்க்கை.

அவரைக்காயின் மருத்துவ குணங்கள்.

தினமும் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகளில் அவரை என்றும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அவரையின் நற்குணங்களை அறிந்து அன்றாடம் தமது உணவுடன் அவரை இனத்தையும் உள்ளெடுத்தனர். அவரை ஒரு கொடி இனத்தாவரமாகும்.

அவரையில் பல இனங்கள் காணப்படுகின்றது. கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக்கொம்பவரை, வெள்ளைஅவரை, சிறகவரை, தம்பட்டவரை, பட்டவரை,குத்தவரை, வீட்டவரை, சிவப்பவரை, பாலவரை, கப்பலவரை, பேரவரை, ஆணைக்காதவரை, காணுவவரை, கொழுப்பவரை, ஆரல்மீனவரை, சிற்றவரை, தீவாந்தவரை ஆகிய வகைகளைக் கொண்டது.

                            கோழி அவரை


சிறகவரை

கொத்தவரை


                             பூனைக்காலி அவரை 
      
அவரைக்காய் உடலுக்குத் தேவையான பல்வேறு  ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது மனிதனுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஒரு கப் அவரைக்காயில் 12.9g புரதம், 9.2g நார்ச்சத்து, 569 கலோரி காபோஹைதரட்டு, 122g நீர்ச்சத்து, 1.2g கொழுப்பு ஆகியவற்றுடன் விற்றமீன் A, C, K , இரும்பு, மக்னீசியம், சோடியம், சக்கரை சத்து, ஒமேகா 3,6 , நாகம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அவரைச் செடியில் காய் மட்டும் இன்றி இலையும் உணவாக உள்ளெடுக்கப்படுகின்றது.

அவரைகாயை நாம் கட்டாயம் நமது உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதனால் எண்ணற்ற வகையில் நமக்கு பயன்களைத் தருகின்றது. அவரைகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
 உடலை சீராக இயங்கவைக்கவும் உதவுகிறது. கர்ப்ப காலங்களில் அவரைக் காய் வகைகளை உட் கொண்டால் கர்ப்பிணிதாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தேவையான ஊட்ச்சத்துகள் கிடைக்கும். 

அவரையில் 33% காணப்படும் இரும்புச்சத்து உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. அவரைக்காய் ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. அவரை நரம்புக்க கோளாறுகளை சுகப்படுத்த சிறந்த காயாகும். தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்றுக்கடுப்பு, வேர்க்குரு, சிரங்கு ஆகிய நோய்களுக்கு அவரை சிறந்த மருந்தாகும்.  அவரை எமதுஉடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் மரபணு உற்பத்திக்கும் உதவி செய்கிறது. மலச்சிக்களுக்கும் சிறந்த உணவாகும்.

பெரும்பாலும் அவரை ஆடி மாதத்தில் விதைக்கப்பட்டு ஆறு மாதத்தில் விளைசல் பெற முடியும். அவரையின் சிறப்புகளுள் ஒன்று நீண்ட நாள் ஆறாத புண்களையும் ஆறவைக்க வல்லதாகும். அவரையை அரைத்து சாறாக்கி புண்களில் தடவுவ வேண்டும். வாதம் , பித்தம் ஆகியவற்றுக்கும் சிறந்ததாகும். அவரைக்காய் ஒரு சிறந்த மருந்தாகும்.





Comments

Post a Comment

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.