சுவை தரும் கனி - 02
அன்னாசி(Pineapple). சாதரணமாக ஒரு மனிதன் சாப்பிடுகின்ற பழமாக தற்காலத்தில் அன்னாசிப் பழம் விளங்குகிறது. அன்னாசி பார்ப்பதற்கு அழகான தோற்றத்திலும் கரடுமுரடான பழமாகவும் காணப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் அன்னாசி செல்வந்தருக்கே உரித்தாக காணப்பட்டது. அரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவரே அன்னாசி பழத்தை ருசித்த முதல் ஐரோப்பியராவார். அன்னாசியின் தாவரவியல்பெயர் அனனாஸ்கோமோசஸ் ஆகும். அரிதாக இருக்கும் இந்தப் பழம் ஐரோப்பியர்களால் அதிகம் விரும்பப்பட்டது. பிரேசில் நாட்டின் தென்பகுதி மற்றும் பராகுவே ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசியில்கல்சியம்,மக்னீசியம்,பொட்டாசியம்,இரும்பு,விற்றமின்C, நார்சத்து, தயமின் ஆகிய சத்துக்கள்கள் காணப்படுகின்றன. அன்னாசி " செந்தாழை"’, "பூந்தாழப் பழம்" என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்தப் பழம் செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல் தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்டது. 100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதம் காணப்படுகின்றது. அன்னாசிப்பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள்