உயிரினத் தகவல் - 10.
கங்காரு(Kangaroo). பார்ப்பதற்கு மானின் முகமும் குரங்கின் உடலமைப்பேடு வயிற்றுப் பகுதியில் பையுடனும் காணப்படும் ஒரு விசித்திர உயிரினமே கங்காருவாகும். கங்காரு அவுஸ்ரேலியா கண்டத்திற்கு சொந்தமான உயிரினமாகும். இதற்கு காரணம் அவுஸ்ரேலியாவில் கங்காரு அதிகமாக காணப்படுகிறமையாகும். சுமார் அவுஸ்ரேலியாவில் இருக்கும் மக்கள் தொகையைவிட இரு மடங்கு அதிகமாக கங்காருகள் அங்கு வாழ்கின்றன. இதனாலே கங்காருவை தேசிய விலங்காக பிரகடனம் செய்துள்ளது அவுஸ்ரேலியா. இவ்விலங்கிற்கு கங்காருஎனப் பெயர் வரக்காரணம் அவுஸ்ரேலியாவின் பூர்வக் குடிகள் இவ் விலங்கை கங்குரு(Gangurru) என்று அழைத்தது ஆங்கிலேயர் காலத்தில் கங்காரு என மாறி தற்காலத்திலும் கங்காரு என அழைக்கப்பட்டு வருகிறது. கங்காருவில் நான்கு வகைகள் உள்ளன. கங்காருகள் மணிக்கு 21Km வேகத்தில் செல்லக் கூடியவையாகும். ஆபத்து வேலைகளில் மணிக்கு சுமார் 72km வேகத்தில் செல்லக் கூடியன. கங்காருக்கள் 6 - 7 அடி வரை வளரக் கூடியவையாகும். கங்காருவின் குட்டி மிக மிக சிறியதாகவே இருக்கும். சிறிய திராட்சை பழம் அளவில் தான் இருக்கும். இக் குட்டிகள் தமது முயற்சியால் கங்காருவின் வயிற்றுபைக்குள் வந்