Posts

ஆரோக்கிய வாழ்க்கை.

Image
கோவை(கொவ்வை)காயின் மருத்துவ குணங்கள். இன்றும் சரி அன்றைய காலங்களிலும் சரி கவிஞர்களைல் உதட்டிற்கு உவமையாக கோவை பழங்களே அதிகம் உவமையாக கூறப்படுகின்றது. கோவை ஒரு கொடிவகைத்தாவரமாகும். கோவைக்கொடியில் காய், பழம், இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துப்பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டதாகும். கோவைப்பூக்கள் வெண்ணிறமானவை. பழங்கள் சிவப்பு நிறமானது. இக்கொடியில் இருந்து பூமிக்குள் கிழங்கு உருவாகும். கோவையின் தாவரவியல் பெயர் coccinia grandis ஆகும். கோவைக்காயில் மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை ஆகிய வகைகளைக் கொண்டது.  கோவைக்காய் பல்வேறு மருத்துவக்குணங்களைக்கொண்டதாகும். இதில் நார்ச்சத்து, விற்றமீன்கள், காபோஹைதரட்டு, இரும்புச்சத்து , கல்சியம் ஆகிய வேதிப் பொருட்கள் உள்ளன. இதன் காய் பச்சை நிறமாகவை பித்தம், ரத்தப் பெருக்கு ஆகியவற்றுக்கு சிறந்ததாகும். இக் காய் நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் சேரும் சக்கரையை கட்டுப்படுத்தக்கூடியதாகும். வாய்ப்புண்க்கு கோவைக்காய் சிறந்த மருந்தாகும். பச்சையாகவே வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும். கோவைக்காய் உடல் வெப்பநிலையையும் குறைக்கும். கோவைக்காயை அர...

நாவல்.

Image
வீரயுக நாயகன் வேள்பாரி. பல்வகைப்பட்ட நவீன தொழிநுட்ப வசதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் எமது மனது சிற் சில சமயங்களில் அவை அனைத்தையும் விட்டு வெளிவந்து சற்று இளைப்பாற நினைத்து புத்தகங்களைத் தேடுகின்றது. இவ்வாறு நான் புத்தக வாசிப்பில் மூழ்கிப்போகையில் தான் எனது நண்பர் ஒருவர் மூலமாக யதார்த்தமாக கிடைத்ததே "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற ஒரு மாவீரனைப் பற்றிய நாவல். இது மாவீரனின் கதை மட்டுமல்ல தமிழனின் பழமை பற்றிய வரலாறும் கூட. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி ஆனந்த விகடனில் வெளிவரும் இந் நாவல் நூறு அத்தியாயங்களைக் கடந்ததாகும். வேள்பாரி ஒரு குறுநில மன்னன் என்றாலும் அவன் மன்னனாக வாழவில்லை மக்களோடு மக்களாக ஒன்றினைந்தே வாழ்ந்தான்.  "பாரி பாரி என்று பல ஏந்தி  ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்  பாரி ஒருவனும் அல்லன்  மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே" என்ற பாடலடியானது பாரிக்கு நிகர் இந்த பாரில் யாரும் இல்லை இந்த உலகில் பாரிக்கு நிகரானவன் மாரியே என்று கூறுகின்றது. தமிழனின் முதல் மகாகவி கபிலரை ஒரு முக்கிய பாத்திரமாக கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார் நாவலாசிரியர்.  பாரியின் மனை...

ஆரோக்கிய வாழ்க்கை.

Image
சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள். தினமும் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அதிகளவு கவனம் செலுத்தவதில்லை. இதனால் காலப்போக்கில் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றது. எனவே ஒவ்வெரு உணவு பொருட்களிலும் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். சூரியகாந்தி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்கொள்வோம். பொதுவாக சூரியகாந்தி இரு தேவைகளுக்காக பயிரிடப்படுகின்றது. சூரியகாந்தி எண்ணையை பெறுவதற்கும் மற்றும் சூரியகாந்தி விதைக்காகவும். சூரியகாந்தி முதல் முதலில் மெக்சிக்கோவிலே பயிரடப்பட்டது. சூரியகாந்தி மலரில் இருந்து பெறப்படும் சூரியகாந்திவிதையினால் எமது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. தினமும் ஒருகைப்பிடி அளவு சூரியகாந்தி விதை சாப்பிடுவதனால் பல வகைப்பட்ட நன்மைகள் ஏற்படும். ஞாபகசக்தி அதிகரிப்பதற்கு சிறந்ததாகும். சமிபாட்டு பிரச்சினைகளிக்கும் சிறந்ததாகும். சூரியகாந்தி விதையில் விற்றமீன் E, நார்ச்சத்து, துத்தநாகம், கொழுப்பு 14g, புரதம் 5.5g, இரும்பு, மக்னீசியம், செலினியம் மற்றும் காபோஹைதரட்டு ஆகிய ஊட்டச்சதுதுக்கள் காணப்படுகின்றது. சூரியகாந்த...

ஆரோக்கிய வாழ்க்கை.

Image
அவரைக்காயின் மருத்துவ குணங்கள். தினமும் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகளில் அவரை என்றும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அவரையின் நற்குணங்களை அறிந்து அன்றாடம் தமது உணவுடன் அவரை இனத்தையும் உள்ளெடுத்தனர். அவரை ஒரு கொடி இனத்தாவரமாகும். அவரையில் பல இனங்கள் காணப்படுகின்றது. கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக்கொம்பவரை, வெள்ளைஅவரை, சிறகவரை, தம்பட்டவரை, பட்டவரை,குத்தவரை, வீட்டவரை, சிவப்பவரை, பாலவரை, கப்பலவரை, பேரவரை, ஆணைக்காதவரை, காணுவவரை, கொழுப்பவரை, ஆரல்மீனவரை, சிற்றவரை, தீவாந்தவரை ஆகிய வகைகளைக் கொண்டது.                             கோழி அவரை சிறகவரை கொத்தவரை                              பூனைக்காலி அவரை         அவரைக்காய் உடலுக்குத் தேவையான பல்வேறு  ஊட்டச...