Posts

சபிக்கப்பட்ட மரகதம்.

Image
  சபிக்கப்பட்ட மரகதம். பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்ற இடத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லே சபிக்கப்பட்ட மரகதம் என்று அழைக்கப்படுகிறது. இக் கல் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பிரேசில் நாட்டி சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட அந்த கல் ஜெனரல் என்ற பட்டப்பெயர் கொண்ட ஒருவர் அதை பெற்றுக்கொண்டார். அவர் அதை 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்தார். இம் மரகதக்கல் இருந்த இடங்களில் எல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் ஏற்படுத்தியதால் இம் மரகத கல் சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகிறது. பின்னர் அமெரிக்காவை அடைந்த அந்த மரகதக்கல்லை Ferrara என்பவரும் Kit Morrison என்பவரும் New Orleans என்னுமிடத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர். அங்கும் அக்கல்லின் சாபம் பலித்தது. கத்ரினா புயல் அந்த இடத்தை துவம்சம் செய்ததுடன் மரகதமும் மாயமாய் போனது.பின் கலிபோர்னியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கல் இறுதியில் லொஸ் ஏஞ்சலில் உள்ள ஷெரீஃப் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச் சபிக்கப்பட்ட மரகதத்திற்காக அமெரிக்கா மற்றும் பிரேசில் மேதிக்கொண்டாலும் பிரேசில் அம் மரகதத்தை தனது தேசிய சொ

இந்திய பிரிட்டிஷ் கிரீடம்.

Image
Imperial crown of india. இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி நிலவிய போது பிரித்தானி மன்னர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அந் நேரங்களில் இந்திய சமஷ்தான மன்னர்களால் தர்பார் உருவாக்கப்பட்டு  பிரித்தானிய மன்னருக்கான மரியாதையும் வழங்கப்பட்டது.  1911இல் பிரித்தானிய மன்னராக பதவியேற்ற 5ம் ஜோர்ஜ் மன்னர் மற்றும் குயின் மேரி ஆகியோர் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற அரசபேரவையில் கலந்து கொண்டனர். இதன் போது  மன்னருக்காக இவ் Imperial crown of India என்ற கிரீடம் தயாரிக்கப்பட்டது. டெல்லி தர்பாரில் 5ம் ஜோர்ஜ் மன்னன் தனக்குத் தானே இக் கிரீடத்தை சூடிக்கொண்டார். இக் கிரீடம் லண்டனின் பிரபல நகை நிறுவனமான  Garrard & Co நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அன்றைய காலத்தில் இக் கிரீடத்தின் பெறுமதி 60000பவுன்ஸ் ஆகும். சுமார் 1.06kg எடை கொண்டதாகும். 31.5m உயரம் உடையது. இக் கிரீடத்தில் 6170 வைரங்கள், 9 மரகதங்கள் மற்றும் 4 ரூபிகற்களைக் கொண்டதுடன் பிரசித்தி பெற்ற கோஹிநூர் வைரம் கிரீடத்தின் முன்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களால் ஆனது. 5ம் ஜோர்ஜ் மன்னன் இக் கிரீடத்தை டெல்லி தர்பாரில்

உலகத் தகவல்.

Image
உலகில் உள்ள கடல்கள் பற்றிய விபரம். கோளவடிவில் அமையப் பெற்றுள்ள இந்த உலகம் 80% நீர் பரப்பால் ஆனதாகும். நிலப்பரப்பில் காணப்படும் அதிசயங்களை விட கடலில் உள்ள நீருக்கு அடியில் காணப்படும்பல அதிசயங்களில் இன்று வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவில் உள்ளது. உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை 1,450,00,00,00,00000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும். உலகில் காணப்படும் கடல்களின் விபரம் கீழே உள்ளன. 01.இந்துப்பெருங்கடல் 02.பசுபிக் பெருங்கடல் 03.மத்தியதரைகடல் 04.கருங்கடல் 05.ஆர்டிக் பெருங்கடல் 06.அந்தாட்டிக் பெருங்கடல் 07.அந்தமான்கடல் 08.ஜாவாகடல் 09.புளோறஸ்கடல் 10.பண்டாகடல் 11.செலபீஸ்கடல் 12.சாலுகடல் 13.தென்சீனக்கடல் 14.கிழக்குசீனக்கடல் 15.மஞ்சள்கடல் 16.ஐப்பானியக்கடல் 17.ஒகோட்ஸ்கடல் 18.பிரிங்கடல்/பேரிங்கடல் 19.லப்டெவ்கடல் 20.காரைக்கடல் 21.பரன்ஸ்கடல் 22.ஆட்டிக்கடல் 23.நோர்வீஜியன்கடல் 24.வெண்கடல் 25.போல்டிக்கடல் 26.வடகடல் 27.ஐரிஸ்கடல் 28.லிகூறியன்கடல் 29.ரிறேனிய

பொதுஅறிவு.

பொது அறிவு வினாக்களும் விடைகளும். 01.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு ? *லிட்டில் பாய் 02.உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? *நேச்சர் 03.நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது? * கல்லீரல் 04.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? *சீனா 05.தகவல் தொழிநுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவின் நகரம் என்ன? *பெங்களூர் 06.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? *ஒக்டோபர்-17 07.சீனாவின் தலைநகரம் எது? *பீஜிங் 08.இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி? *பிரம்மபுத்ரா 09.பாரதியார் பிறந்த ஊர் எது? *எட்டயபுரம் 10.உலகில் மிகப்பெரிய நாடு எது? *ரஷ்யா