அழகுக் கலை.

முகத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்க எளிய இயற்கையான வழிகள்.

பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இன்றைய காலத்து பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.ஆனால் இன்று கடைகளில் விற்கப்படும் ஏகப்பட்ட கெமிக்கல் நிறைந்த கிறீம்கள் போன்றவற்றையே பயன்படுத்துகின்றார்கள்.

சுருக்கத்தை தடுக்கும் பராமரிப்பை மேற்கொள்ளாமல் மாறாக அதை மறைக்க நீங்கள் செய்யும் அதிகப்படியான மேக்கப் எந்தவிதமான பலனும் அளிக்காது. மாறாக அந்த சுருக்கத்தை மறைக்கவு ம் முடியாது. அவை மேக்கப்பை மீறி தெளிவாக தெரியும். குறிப்பாக கண்கள், கன்னங்கள், வாய்ப்ப குதிகளில் அந்த சுருக்கங்கள் தெளிவாக தெரியும். 

முகச்சுருக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது குறைந்த அளவில் நீராகாரம் உட்கொள்ளல். சேர்க்கையான குடிபானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்ளல், அதிகபடியான மேக்கப் மற்றும் கிறீம் பாவணை போன்றவற்றால் தற்காலத்தில் இளம் பருவத்திலே முகச்சுருக்கம் ஏற்படுகிறது.

இவைதவிர சருமத்தைப் பராமரிக்காமல் அதிக நேரம் சூரிய ஒளியின் தாக்கத்தைப் பெறுபவர்க ளும், வேகமாக உடல் எடையை குறைப்பவர்களுக்கும். உடலில் வைட்டமின் சி. ஏ, இ குறைபாடு கொண்டவர்களுக்கும் இளவயதானாலும் சுருக்கம் உண்டாகும்.

அந்தகாலத்து பெண்கள் முகச்சுருக்கம் இல்லாம் முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள இயற்கை வழிகளே பின்பற்றினார்கள். இருப்பினும் இது நிறந்த தீர்வினை தராது. முகச்சுருக்கத்தை எளியமுறையில் நீக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து  முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து நல்ல மாற்றம் ஏற்படும்.

வெள்ளரிக்காயில் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் கே, சி போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் முக்கியமான பொருளும் உள்ளது. இது சரும  சுருக்கங்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சூடாக வடித்த சாதத்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு தனியாக ஒரு கிண்ணத்தில் எப்பொழுதும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாதம் நம் முகச் சுருக்கத்தைப் போக்கி, நம் முகத்தில் இருக்கும் துவாரங்களை இருக செய்கிறது. 

பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரங்கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

நாளடைவில் முகச்சுருக்கம் மறையும். வெங்காயத்தை அரைத்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.

முட்டையின் வெள்ளக்கருவைத் தடவி சிறிது நேரங்கழித்து முகம் கழுவ வேண்டும்.

முட்டைகோஸ் இலைகளை அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஈஸ்ட்டை கலந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.

சந்தனப் பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

நேரம் கிடைக்கும் போது கிடைக்கும் போதெல்லாம் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைசாறு கலந்து முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். இவை வயதான தோற்றத்தை மறைக்க செய்யும். உங்கள் சரு மத்தை இளமையாகக் காட்டும். மற்றவற்றைத் தனிதனியாக பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்யும் போது கீழிலிருந்து மேல் நொக்கி செய்வது சுருக்கத்தை அதிகரிக்காது.

அழகை அதிகரிக்க செய்யும் பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு, தரமான சந்தனப்பொடி, ரோஜா இதழ்கள் போன்ற ஃபேக்குகளும் சருமத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாற்றும். இந்த பராமரிப்பு வெளிப்பூச்சு வழியாக சருமத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாற்றும்.

சிலர் குளியலுக்கு அதிக சூட்டுள்ள வெந்நீரை பயன்படுத்துவார்கள். எப்போதும் குளிர்ந்த நீரை மட்டுமே பயன் படுத்துவது அழகையும் அதிகரிக்கும். அல்லது மிதமான சூட்டில் பயன்படுத்தலாம். முகத்துக்கு பொலிவை தருவதில் சுத்தமான குளிர்ந்த நீரும் முக்கிய பங்குவகிக்கிறது.

உடலில் அதிகப்படியாக நீர்ச்சத்து குறையும் போது டிஹைட்ரேட் பிரச்சனை உண்டாகும். இது உண் டாகும் போது உடல் ஆரோக்கிய இழப்பும் சருமத்தில் சுருக்கங்களும் அதிகரிக்க தொடங்கும். அத னால் தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. தாகம் இல்லையென்று தவிர்க்க கூடாது.

களையிழந்த முகத்துக்கு ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழங்களை சேர்த்து கூழ் போல் அரைத்து ஃபேஸ் பேக் போடலாம். இதனால் சருமத்தில் இருக்கும் சுருக்கம் மறைவதோடு மேலும் சுருக்கமா வதும் தடுக்கப்படும்.

 உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

அதே போன்று சருமத்துக்கு கிடைக்க வேண்டிய ஊட்டசத்துகளை உணவு வழியாக எடுத்துகொள்ள வேண்டும். அதிகளவான பழங்களை உட்கொள்ள வேண்டும். இதையெல்லாம் சரியாக கடைப்பிடித்தால் முகச்சுருக்கத்தை தடுக்க முடியும்.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.