Posts

Showing posts from December, 2023

ஆரோக்கிய வாழ்க்கை.

Image
ஆரோக்கிய வாழ்வுக்கு உட்கொள்ள வேண்டிய சிறுதானிய வகைகள். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தானியங்களில் சிறுவிதைகளைக் கொண்ட கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவையே சிறுதானியங்கள். மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்டவை; மனிதர்களைப் பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்கொண்டவை. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. சிறுதானியங்கள் உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம், தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைகிறது. சிறுதானியங்கள் டிரிப்டோபான் எனப...

அழகுக் கலை.

Image
முகத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்க எளிய இயற்கையான வழிகள். பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இன்றைய காலத்து பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.ஆனால் இன்று கடைகளில் விற்கப்படும் ஏகப்பட்ட கெமிக்கல் நிறைந்த கிறீம்கள் போன்றவற்றையே பயன்படுத்துகின்றார்கள். சுருக்கத்தை தடுக்கும் பராமரிப்பை மேற்கொள்ளாமல் மாறாக அதை மறைக்க நீங்கள் செய்யும் அதிகப்படியான மேக்கப் எந்தவிதமான பலனும் அளிக்காது. மாறாக அந்த சுருக்கத்தை மறைக்கவு ம் முடியாது. அவை மேக்கப்பை மீறி தெளிவாக தெரியும். குறிப்பாக கண்கள், கன்னங்கள், வாய்ப்ப குதிகளில் அந்த சுருக்கங்கள் தெளிவாக தெரியும்.  முகச்சுருக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது குறைந்த அளவில் நீராகாரம் உட்கொள்ளல். சேர்க்கையான குடிபானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உட்கொள்ளல், அதிகபடியான மேக்கப் மற்றும் கிறீம் பாவணை போன்றவற்றால் தற்காலத்தில் இளம் பருவத்திலே முகச்சுருக்கம் ஏற்படுகிறது. இவைதவிர சருமத்தைப் பராமரிக்காமல் அதிக நேரம் சூரிய ஒளியின் தாக்கத்தைப் பெறுபவர்க ளும், வேகமாக உடல் எடையை குறைப்பவர்களுக்கும். உடலில் வைட்டமின் சி. ஏ...

வரலாற்றுத் தகவல்.

Image
பண்டைய தமிழனின் 47 வகையான நீர்நிலைகள். நீர் என்பது நமது வாழ்வின் ஒரு பாகமாக அமைந்துள்ளது. நீர் இன்றி உயிரினங்களால் வாழ முடியாது. தற்போது நாம் வாழும் சமூகத்தில் நீர் மாசு மற்றும் நீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் காணப்பட்டாலும் ஆதி காலம் தெட்டே மனிதன் நீரை சேமித்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளான். குறிப்பாக பண்டைய தமிழன் பல்வேறு வகையான நீர்நிலைகளை அமைத்து நீர்னை சேமித்து வைத்து மனிதனது அன்றாட தேவைகள், விவசாயம் போன்றவற்றுக்து பயன்படுத்தியுள்ளான். குறிப்பாக பழந்தழிழர் 47 வகையான நீர்நிலை அமைத்து நீரை தேக்கி வைத்துள்ளான். அது பற்றிய தகவல்களை பார்க்கலாம். 01.அகழி(moat) பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்.அந்த காலத்தில் கோட்டைகளின் வெளிப்பக்கத்தில் கோட்டையைச்சுற்றி ஒரு வாய்க்கால் போல் அகழியை வெட்டி வைத்திருப்பார்கள். இதில் நிறைய முதலைகளை விட்டுவிடுவார்கள். போர்க்காலங்களில் கோட்டையை எதிரிகள் நெருங்காமல் இருக்க இந்த முறை. 02.அருவி(water fall) மலையின் உச்சியில் தேங்கிய நீர், கீழே உள்ள பள்ளத்தாக்கு அல்லது ஆற்றில் விழுவதே அருவி எனப...