ஆரோக்கிய வாழ்க்கை.
ஆரோக்கிய வாழ்வுக்கு உட்கொள்ள வேண்டிய சிறுதானிய வகைகள். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தானியங்களில் சிறுவிதைகளைக் கொண்ட கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவையே சிறுதானியங்கள். மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்டவை; மனிதர்களைப் பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்கொண்டவை. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. சிறுதானியங்கள் உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம், தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைகிறது. சிறுதானியங்கள் டிரிப்டோபான் எனப