Posts

Showing posts from October, 2024

சபிக்கப்பட்ட மரகதம்.

Image
  சபிக்கப்பட்ட மரகதம். பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்ற இடத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லே சபிக்கப்பட்ட மரகதம் என்று அழைக்கப்படுகிறது. இக் கல் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பிரேசில் நாட்டி சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட அந்த கல் ஜெனரல் என்ற பட்டப்பெயர் கொண்ட ஒருவர் அதை பெற்றுக்கொண்டார். அவர் அதை 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்தார். இம் மரகதக்கல் இருந்த இடங்களில் எல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் ஏற்படுத்தியதால் இம் மரகத கல் சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகிறது. பின்னர் அமெரிக்காவை அடைந்த அந்த மரகதக்கல்லை Ferrara என்பவரும் Kit Morrison என்பவரும் New Orleans என்னுமிடத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர். அங்கும் அக்கல்லின் சாபம் பலித்தது. கத்ரினா புயல் அந்த இடத்தை துவம்சம் செய்ததுடன் மரகதமும் மாயமாய் போனது.பின் கலிபோர்னியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கல் இறுதியில் லொஸ் ஏஞ்சலில் உள்ள ஷெரீஃப் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச் சபிக்கப்பட்ட மரகதத்திற்காக அமெரிக்கா மற்றும் பிரேசில் மேதிக்கொண்டாலும் பிரேசில் அம் மரகதத்தை தனது தேசி...

இந்திய பிரிட்டிஷ் கிரீடம்.

Image
Imperial crown of india. இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சி நிலவிய போது பிரித்தானி மன்னர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அந் நேரங்களில் இந்திய சமஷ்தான மன்னர்களால் தர்பார் உருவாக்கப்பட்டு  பிரித்தானிய மன்னருக்கான மரியாதையும் வழங்கப்பட்டது.  1911இல் பிரித்தானிய மன்னராக பதவியேற்ற 5ம் ஜோர்ஜ் மன்னர் மற்றும் குயின் மேரி ஆகியோர் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற அரசபேரவையில் கலந்து கொண்டனர். இதன் போது  மன்னருக்காக இவ் Imperial crown of India என்ற கிரீடம் தயாரிக்கப்பட்டது. டெல்லி தர்பாரில் 5ம் ஜோர்ஜ் மன்னன் தனக்குத் தானே இக் கிரீடத்தை சூடிக்கொண்டார். இக் கிரீடம் லண்டனின் பிரபல நகை நிறுவனமான  Garrard & Co நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அன்றைய காலத்தில் இக் கிரீடத்தின் பெறுமதி 60000பவுன்ஸ் ஆகும். சுமார் 1.06kg எடை கொண்டதாகும். 31.5m உயரம் உடையது. இக் கிரீடத்தில் 6170 வைரங்கள், 9 மரகதங்கள் மற்றும் 4 ரூபிகற்களைக் கொண்டதுடன் பிரசித்தி பெற்ற கோஹிநூர் வைரம் கிரீடத்தின் முன்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களால் ஆனது. 5ம் ஜோர்ஜ் மன்னன் இக் கிரீடத்...